சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அத்துமீறும் ஆளுநர்,எதிர்த்து நில்".. ட்விட்டர் ஸ்பேஸில் அனல் பறந்த வாதம்!.. யார் பேசியது தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: அத்துமீறும் ஆளுநர், எதிர்த்து நில் தமிழகமே என்ற தலைப்பில் ட்விட்டரில் ஸ்பேஸில் விவாதம் நடந்துள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா, 7 தமிழர்கள் விடுதலை உள்ளிட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்தி வருகிறார் என்ற விமர்சனம் உள்ளது. தமிழகம் மட்டுமில்லை பாஜக ஆளாத பெரும்பாலான மாநிலங்களிலும் ஆளுநருக்கும் அரசுக்கும் முட்டல் மோதல்தான் இருந்து வருகிறது.

தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம்

இதுகுறித்து சமூகவலைதளங்கள், செய்தித்தாள்கள், டிவி சேனல்கள் என விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆளுநருக்கான அதிகாரத்தில் சிலவற்றை மாற்ற வேண்டும் என்றும் தீர்மானங்கள் மாநிலங்களவையில் எம்பி வில்சனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் அத்துமீறும் ஆளுநர்- எதிர்த்து நில் தமிழகமே என்ற தலைப்பில் விவாதம் நேற்று நடத்தப்பட்டது.

விசிக எம்எல்ஏ

விசிக எம்எல்ஏ

இதில் விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ், ஆழி செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த ஸ்பேஸில் பேசப்பட்டவைகளில் சில பாயிண்ட்கள் உங்களுக்காக: ஆளுநருக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கு என்பது கடந்த சில நாட்களாக மட்டும் இல்லை. கடந்த மே மாதம் முதல் இருந்து வருகிறது. மேலும் அதிமுக ஆட்சியின் போது அந்த அரசை ஆளுநர் கையில் எடுத்துக் கொண்டார் என்பது நம்மில் பலருக்கு தெரியும்.

நீட் தொடங்கி

நீட் தொடங்கி

நீட் தொடங்கி பல்கலைக்கழக சட்ட மசோதா வரை ஆளுநர் ஒவ்வொரு விஷயத்திலும் அத்துமீறுவதை பார்க்கிறோம். நாம் பேசும் விவகாரம் எது ஆளுநரின் அதிகாரம், எது கேபினட்டின் அதிகாரம் என்ற கோணத்தில் சித்தரிக்கப்படுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவது நம்முடைய வாக்குரிமையை கேள்விக்குள்ளாவது ஆகும்.

அதிகாரம்

அதிகாரம்

எங்கோ ஒரு அரசின் அதிகாரமோ திமுக அரசின் அதிகாரமோ பறிக்கப்படவில்லை. நாம் ஓட்டு போட்டு ஒரு கட்சியை தேர்ந்தெடுத்துள்ள மக்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. இது யாரால் பறிக்கப்படுகிறது என்றால் மத்தியில் ஆட்சி செய்யும் ஒரு அதிகாரியால் அதாவது ஆளுநரால் பறிக்கப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு கொள்ளைப்புறமாக ராஜாஜியை முதல்வராக்க தொடங்கியதிலிருந்து இன்று 2022 ஆம் ஆண்டு திமுக அரசை முடக்க நினைப்பது வரை மத்திய அரசு சதி செய்கிறது.

மத்தியில் காங்கிரஸ்

மத்தியில் காங்கிரஸ்

மத்தியில் காங்கிரஸ் ஆளும் போது மாநில ஆளுநர்கள் அதிகாரத்தை மீறுவதாக பாஜக முதல்வர்களே குற்றம்சாட்டியிருந்தனர். 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஆளுநரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். 1935 இல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஒட்டி காலனியாதிக்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஜனநாயக வடிவம் என்பதில்லாமல் ஐரோப்பா, அமெரிக்காவை போல் மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய குடியரசாக இருந்தால் கவர்னர் என்ற பதவி இங்கே இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

 ஆளுநர் முறை

ஆளுநர் முறை

ஆளுநர் என்ற முறையே ஒரு காலனிக்காலத்தின் நீட்சிதான் என்பது அனைவருக்கும் தெரியும். 2014 ஆம் ஆண்டு மோடி அரசு வந்த பிறகு ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என பார்க்கும் போது மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மத்திய அரசு மையத்தில் அதிகாரத்தை குவித்து கொள்வது என்பது என்னை பொருத்தவரையில் இந்தியா குடியாட்சியான முதல் நாளில் இருந்தே நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆளுநர்கள் அப்போது முதல் இப்போது வரை மத்திய அரசின் முகவராகத்தான் மாநிலத்தில் செயல்படுகிறார் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு விஷயம். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநில அரசுகள், ஒன்றிய அரசு இருக்கின்றன. மாநில அரசு எனும் அரசியல் அலகை (political unit) எப்போதுமே மட்டம் தட்டி வைக்க வேண்டும், அவர்களது அதிகாரத்தை பறிக்க வேண்டும், அதிகார குவிப்பு என்ற ஒரு முறையைதான் நாம் பார்த்தோம்.

இந்தியா ஒற்றை அரசியல்

இந்தியா ஒற்றை அரசியல்

ஆனால் இப்போது இந்தியா என்பதே ஒரு ஒற்றை அரசியல் அதிகார அலகு. ஒரு அரசாங்கம் போதும். இந்தியாவில் மாநில அரசு எனும் அரசியல் அலகு தேவையில்லை. மாநிலங்களை ஆட்சியரோ காவல் துறை அதிகாரியோ நிர்வகித்தால் போதும் மற்ற எல்லா அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். குறிப்பாக மாநிலங்களில் சட்டம் இயற்றக் கூடிய அதிகாரம், அதை நிறைவேற்றக் கூடிய அதிகாரத்தை முழுமையாக நீக்கிவிட வேண்டும் என்ற சிந்தனையில் மத்தியில் ஆட்சியாளர்கள் உள்ளார்கள். இதுதான் 2014 ஆம் ஆண்டுக்கு முன்புக்கும் இன்றுள்ள சூழலுக்கும் உள்ள வித்தியாசம்.

அறிஞர் அண்ணா சொன்னது என்ன

அறிஞர் அண்ணா சொன்னது என்ன

மாநிலங்கள் என்பது ஒரு பொலிட்டிக்கல் யூனிட்ஸ் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. 1963 இல் பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். அப்போது திமுகவையும் அண்ணாவையும் பார்த்து மத்தியில் ஆள்பவர்கள் முன் வைத்த விஷயம் என்னவென்றால் நீங்கள் இறையாண்மைக்கு எதிராக இருக்கிறீர்கள் என்பதுதான். அப்போதுதான் அண்ணா தனது முதல் பேச்சில் இறையாண்மை என்றால் என்ன என கேள்வி எழுப்பினார்.

இறையாண்மைக்கு அண்ணா கொடுத்த விளக்கம்

இறையாண்மைக்கு அண்ணா கொடுத்த விளக்கம்

அண்ணா இறையாண்மை குறித்து கூறுகையில் இறையாண்மை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசியல் இறையாண்மை என்பது மக்களிடம் தங்கியிருக்கிறது. சட்ட இறையாண்மை என்பது மத்திய அரசுக்கும் அதனுடைய பகுதிகளாக உள்ள மாநில அரசுகளுக்கும் பிரித்து தரப்பட்டுள்ளது. அதிகாரம் என்பது டெல்லியில் மட்டும் குவித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. எந்த இறையாண்மையை நாங்கள் மீறினோம் என சொல்கிறீர்கள் என அண்ணா கேள்வி எழுப்பினார். இது மிகவும் அடிப்படையான கேள்வி. இதற்கு அன்றும் பதில் சொல்லப்படவில்லை. இன்றும் பதில் சொல்லப்படவில்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பாஜக ஏற்கவில்லை. மாநில அரசே வேண்டாம், அப்படியே இருந்தாலும் நிர்வாக ரீதியில் இருந்தால் போதும், அரசியல் அலகாக இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். இதனால்தான் பாஜக அரசு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கங்களை விரும்புகிறது.

Recommended Video

    தமிழர்களை பூச்சி புழு போல நினைத்துவிட வேண்டாம்.. - EVKS | Oneindia Tamil
    ஆளுநர் எதிர்ப்பது எதை

    ஆளுநர் எதிர்ப்பது எதை

    ஆளுநர் என்பவர் யாரென்றால் ஒரு மாநிலத்தில் பாஜக இல்லாத ஆட்சி இருந்தால் வெறுமனே அந்த ஆட்சிக்கு டார்ச்சர் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமில்லை. திமுக அரசையோ, ஆம் ஆத்மி அரசையோ காங்கிரஸ் அரசையோ சிவசேனா அரசையோ எதிர்ப்பது ஆளுநர்களின் நோக்கமல்ல. மாநில அரசுக்கு இருக்கும் சட்டமியற்றும் உரிமையை எதிர்ப்பதுதான் அவர்களது நோக்கம். இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், " மாநில அரசு தன்னுடைய சட்ட வரம்புக்குள் ஒரு சட்டத்தை இயற்றும் போது அதை முழுமையாக புறக்கணிக்கிறார் ஆளுநர். மாநில அரசின் சட்ட இறையாண்மையை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என ஆளுநர் சொல்கிறார். ஆனால் ஆளுநருக்குள்பட்ட அதிகாரங்களில் அவர் அதை செய்ய முடியாது. ஒரு மசோதாவை தடுக்கவோ நீண்ட காலத்திற்கு கிடப்பில் போடவோ முடியாது. இதை உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விஷயத்தில் மிகவும் தெளிவாக சொல்லியுள்ளது. இப்படியாக உரை நீண்டு வருகிறது.

    English summary
    A debates conducted in Twitter spaces about Governor violates his rights and what are governor's rights, what they want to do on states? etc are debated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X