வீட்டுக்கு திடீர் விசிட் கொடுத்த விருந்தினர்.. அதிர்ந்துபோன மக்கள்.. மீட்ட தீயணைப்புத்துறை
சென்னை: சென்னை ஆவடி அருகே வீட்டில் பிடிபட்ட மலை பாம்பை வன உயிரினங்கள் பாதுகாப்பு தன்னார்வலர் மீட்டு வன உயிரியல் காப்பகத்தில் ஓப்படைத்தார்.
Recommended Video
பாம்பு என்றால் படையும் நடுங்கும், அதுவும் மலைப்பாம்பு என்றால் சொல்லவே வேண்டாம். அதன் தோற்றமே பலரை பயமுறுத்திவிடும். பாம்பு வந்தால் நம்மவர்கள் கல்லை எடுத்தோ அல்லது குச்சையை எடுத்து அடிப்பதோ இப்போது குறைந்தவிட்டது.
உண்மையில் இது வரவேற்க வேண்டிய நல்ல மாற்றம். பலரும் இப்போது பாம்பு பிடிக்க தீயணைப்பு துறை அல்லது பாம்பு பிடிப்பவர்களை உடனே அழைக்கிறார்கள். அவர்கள் லாவகமாக பாம்புகளை பிடித்து வனத்திற்குள் விட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக பாம்புகள் இப்போது தப்பிக்கின்றன.

புதரில் வந்த சத்தம்
அப்படி ஒரு நல்ல உள்ளம் தான் சென்னை ஆவடி அருகே பாம்பை பார்த்து அடித்துக் கொல்லாமல் அதை பிடித்து பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். என்ன நடந்து? இப்போது பார்ப்போம். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி கிராமத்தில் புல்லட் ராஜ் என்பவரின் வீட்டு வாசலின் புதரில் சத்தம் கேட்டதால் அருகில் சென்று பார்த்துள்ளார். பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைத்துள்ளார்.

கிண்டி வன உயிரியல் பூங்கா
அதேநேரம் பாம்பை அடித்துக்கொல்லாமல் ஊர் மக்கள் உதவியுடன் பாம்பை பிடித்த புல்லட் ராஜ் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வன உயிரினங்கள் பாதுகாப்பு தன்னார்வலர் ரீகன் இளைஞர்களிடம் இருந்து பாம்பை மீட்டார். பின்னர் கிண்டியில் உள்ள வன உயிரியல் காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டது... வீட்டின் வாசலின் புதரில் பதுங்கி இருந்த மலை பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மனிதனை விழுங்குமா
ஒரு மலைப் பாம்பு மனிதரை கூட விழுங்கும் என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மிக மிக அரிதாகவே நடந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் 2018ம் ஆண்டு நடந்துள்ளது. இதுபற்றி பிசிசி செய்தியும் அப்போது வெளியிட்டுள்ளது, அந்த தகவலை இப்போது பார்ப்போம். ஒரு இந்தோனீசிய பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்றுவிட்டது அந்த நாட்டு அதிகாரிகள் 2018ம் ஆண்டு கூறினார்கள். இது நம்பமுடியாத அரிதான சம்பவம் ஆகும்.

பாம்பு வயிற்றில் பெண்
54 வயதான வா டிபா எனும் பெண், சுலவேசி மாகாணம் முனா தீவில் உள்ள தனது காய்கறி தோட்டத்திற்கு சென்றபோது காணாமல் போனார்.ஒருநாள் கழித்து அப்பெண்ணின் காலணியும், அவரின் கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. 30 மீட்டர் அருகில் வீங்கிய வயிருடன் 32 அடி நீள மலைப் பாம்பு படுத்து கிடந்தது. ''காணாமல் போன பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியதாக மக்கள் சந்தேகித்தனர். அதனால் அப்பாம்பைக் கொன்றுவிட்டனர்'' என்கிறார் உள்ளூர் காவல்துறை அதிகாரி ஹம்கா. ''பாம்பின் வயிறு அறுக்கப்பட்டது. வயிற்றின் உள்ளே அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.'' பெரும் கூட்டத்தின் முன்பு, பாம்பின் வயிற்றில் இருந்து பெண்ணின் உடல் எடுக்கப்படும் காணொளி இந்தோனீசிய சமூக வலைத்தளத்தில் 2018ம் ஆண்டு வேகமாக பரவியது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications