சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு.. நிருபர் மீது மர்ம நபர் தாக்குதல்!

சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வந்த சூழலில், அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிருபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் மாளிகையில் நிருபர் மீது மர்ம நபர் தாக்குதல்- வீடியோ

    சென்னை: மதிமுக தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வந்த சூழலில், அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிருபரை அடையாளம் தெரியாத வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். பலமுறை இவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

    A reporter attacked during the protest outside the Chennai governor house

    இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக மதிமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் சென்னை சின்னமலையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வைகோ தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் பெரிய கவனம் ஈர்த்து இருக்கிறது.

    போராட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் போராட்டம் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே இருக்கக்கூடிய தனியார் தேநீர் விடுதியில், தேநீர் அருந்திய வாலிபர் ஒருவர், தாம் அருந்திய தேநீருக்கு பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அச்சமயத்தில் இதனை படமெடுக்க முயன்ற மிரர் நவ் (Mirror Now) ஆங்கிலத் தொலைக்காட்சியின் நிருபர் பிரமோத்தை, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் தாக்கினார்.

    பிரமோத்தின் கண், முகத்தில் கடுமையாக தாக்கினார். இதனால், அதை பிரமோத்தின் கண்களில் கடுமையாக காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து சக நிருபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி போலிசார் விசாரித்து வருகிறார்கள்.

    மதிமுகவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிருபர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டிருப்பது சக நிருபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A reporter attacked during the protest outside the Chennai governor house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X