இது புதுவரவா? நாக்கு ஏன் அப்படி போகுது! நாகினி பார்ட்-3 காட்டிய பெண் சாமியார்! தண்ணி ஊத்துங்கப்பா!
சென்னை : நித்யானந்தா, அன்னபூரணி அரசு அம்மா வரிசையில் தமிழக மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவதாரம் எடுத்துள்ளதாக நினைத்து புது வரவாக வந்துள்ள பெண் சாமியார் ஒருவர் பூஜை என்ற பெயரில் செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
'கடவுள் இல்லை அப்படின்னு சொல்றவங்கள நம்பலாம்' 'கடவுள் இல்லைன்னு சொல்றாங்கல்ல அவங்களையும் நம்பலாம்' ஆனால் நான் தான் கடவுள் அப்படின்னு சொல்றவங்கள நம்ப கூடாதுன்னு கமலஹாசன் சொல்லும் வசனம் ரொம்பவே பிரபலம்.
மக்கள் தங்களுடைய நம்பிக்கைக்காக இறைவனை தேடி போறாங்க.. ஆனா நான் தான் அந்த இறைவனுடைய அவதாரம் என்று மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கும்பல்களில் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போலி சாமியார்
இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாகவே அவ்வாறான போலி சாமியார்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகையே காப்பாற்ற அவதாரம் எடுக்கிறேன் என்று தோன்றிய சாமியார்கள் பல கடலூரிலும் வேலூரிலும் கம்பி எண்ணிய கதை வேறு. அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பவர்கள் இரு சாமியார்கள் ஒன்று கைலாச என்ற தீவினை உருவாக்கி விட்டேன் என்று இந்தியாவிலிருந்து கல்தா கொடுத்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா. கைலாசாவில் கலாசலா கலசலா என சந்தோசமாக இருக்கும் அவர் சற்று ஓய்வு பெற்ற நிலையில் அதாவது சமாதி நிலையில் இருக்கிறேன் என நீண்ட ரெஸ்ட்க்கு போக திடீரென்று ஒரு பெண் சாமியார் முளைத்தார்.

அன்னபூரணி அரசு அம்மா
ஆறு மணிக்கு மேல் கை நடுங்கும் குடிமகன்கள் போல திடீரென வைப்ரேஷன்கள் காட்டி பூ மழை பொழிய பக்தர்களின் உணர்ச்சிப் பெருவெள்ளத்திற்கிடையே நான் தான் அம்மாவின் அவதாரம் என்று தனது அதிரடி எண்ட்ரியை கொடுத்தார் அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார். இவர எங்கேயோ பார்த்திருக்மோமே என நெட்டுசன்கள் குழம்பிய நிலையில் ஏதோ ஒரு புண்ணியவான் இவர் தனியார் தொலைக்காட்சியில் பஞ்சாயத்து நிகழ்ச்சியில் வந்தவர் என போட்டுக் கொடுத்தார்.

புது சாமியார்
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்தும் அதனை கண்டு கொள்ளாமல் நித்தியானந்தா லேடிஸ் வெர்ஷன் என்பவர் போல திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து தற்போது பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆளே இல்லாத கடையில் டி ஆக்குவது போல தனக்கான பணியாளர்களை தானே நியமித்துக் கொண்டு தற்போது பூஜை நடத்தி வருகிறார். இதில் பாத பூஜைக்கு ஒரு பேமெண்ட், போனில் தீட்சை பெற தனி பேமெண்ட் வேறு.

பெண் சாமியார்
இந்த நிலையில் தான் நான் மட்டும் என்ன சும்மாவா இப்ப பாருங்க என அதிரடி எண்ட்ரி கொடுத்திருக்கிறார். பெண் சாமியார் ஒருவர். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்காத நிலையில் தற்போது அவர் நடத்தும் அட்ரா சிட்டிகள் தான் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. எலுமிச்சம் மாலை கைகளில் வேப்பங்கொத்து சகிதமாக ஆங்கார முகத்துடன் பயங்கர போஸ் கொடுக்கும் அந்த பெண்ணுக்கு பூஜை செய்கிறேன் என்ற பெயரில் தயிரை போன்ற ஒன்றை மூஞ்சியில் கொட்ட அது கண்ணை மறைத்துக் கொள்கிறது.

சேட்டைகள்
மூச்சு முட்டுவது தாங்க முடியாமல் கைகளால் துடைத்து விட்டு பின்னர் ஒரு குடம் தண்ணீரை தலையில் ஊற்றுகிறார்கள். ஐந்து வயது குழந்தை ஹார்லிக்ஸ் சாப்பிடுவது போல அதை நாக்காலே சுத்தம் செய்துவிட்டு பின்னர் தலையில் ஊற்றிய தண்ணீரில் வாஸ் செய்து கொள்கிறார். அப்போது அவர் கொடுக்கும் ஒரு போசை பார்த்து சத்தியமாய் மிரண்டு போகாதவர்கள் இருக்க முடியாது.

நெட்டிசன்கள் கிண்டல்
பின்னர் நெய் பஞ்சாமிர்தம் வாழைப்பழம் உள்ளிட்ட ஐட்டங்களை அமுக்கிவிட்டு அருள்வாக்கு சொல்லும் அவரைச் சுற்றி ஆனந்த கோஷங்களுடன் பக்தர்கள் காத்திருக்கின்றனர். யார் இவர் என தற்போது வரை ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது விரைவில் அவர் யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம் அதே நேரத்தில் சாமியை நம்பலாம் நான்தான் சாமி என்பவர்களை நம்ப கூடாது என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications