துரோகி எடப்பாடியா! துதியை மாற்றி பாடிய இபிஎஸ் குரூப்! ஓவரா ஜெர்க் ஆகுதே! சிரிப்பாய் சிரித்த போலீஸ்!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்தின் வாயிலில் நிறுத்தப்படிருந்த ஓபிஎஸ் வாகனத்தை எடுக்கச் சொல்லி ரகளையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ஒருவர் கேமராவை பார்த்ததும் ஆர்வமிகுதியில் 'எடப்பாடியார் ஒழிக' என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற ஐகோர்ட் தடை விதித்த நிலையில், பெரிதும் பரபரப்பு நிலவியது.
ஜுலை 11 பொதுக்குழு 2.0! முன்னரே போடப்பட்ட பக்கா பிளான்! இதுதான் காரணமா?பரபர பின்னணி! உற்சாக இபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு கூட்டம்
இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் நடந்த இடத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வரும் போது, பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முழக்கமிட்டனர். கூட்ட அரங்கில் எழுந்து நின்று, அதிமுகவின் வாரிசு, எடப்பாடி வாழ்க, பொதுச் செயலாளர், ஒற்றைத் தலைமை எடப்பாடி , ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் என எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு ஓ பன்னீர் செல்வம் வந்த வாகனத்தை வெளியே எடுக்கச் சொல்லியும் எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி குழு
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு வந்து விட்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். மேடையில் ஏறாமல் அருகே இருந்த அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் வந்த பிரச்சார வாகனம் எடப்பாடி பழனிச்சாமியின் கார் வரும் வழியில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஓபிஎஸ் மண்டபத்துக்குள் சென்ற நிலையில் ஓட்டுனர் மட்டும் உள்ளே இருந்தார்.

ஆதரவாளர்கள் ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் சிலர் அந்த வாகனத்தை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு அங்கிருந்த காவல்துறை மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். வீடியோ எடுப்பதை கவனித்த நிர்வாகி ஒருவர் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக திடீரென எடப்பாடி ஒழிக என முழக்கமிட்டார்.

மாற்றி முழக்கம்
பிறகுதான் தெரிந்தது தான் ஓபிஎஸ் ஒழிக என முழக்கமிட வேண்டும் என்பது. இதனை அருகில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து நைசாக கூட்டத்திற்குள் சென்று விட்டார். இதைப்பார்த்த காவல்துறை அதிகாரிகள் கெக்கே பெக்கே என சிரித்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முழக்கத்தைக் கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லையா என அந்த பொதுக்குழு நிர்வாகியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.