ஆதவ் வெளியிட்ட பொய் வீடியோ? மாநாட்டுக்கு 1 ரூபாய் தரவில்லையா? விசிக புதிய சர்ச்சை
சென்னை: திருமாவளவன் 200 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டதாக வதந்தி பரவிய போது அதைக் கண்டித்து ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிடாமல் மவுனமாக இருந்தது ஏன் என்று விசிக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக விசிக Vs திமுக இடையேயான மோதல் போக்கிற்கு காரணமாக இருந்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்துள்ளதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார். திமுக கூட்டணிக்குள் இருந்து கொண்டே உதயநிதிக்கு எதிராகக் கடந்த 2 மாதங்கள் முன்னதாக ஒரு வாரப் பத்திரிகையில் '4 ஆண்டுகள் முன்னதாக சினிமாவில் வந்து அரசியலுக்கு வந்தவர் துணை முதல்வராகும் போது 40 வருடங்களாக அரசியல் களத்தில் உள்ள திருமாவளவன் முதல்வராகக் கூடாதா?' என்று ஆதவ் அர்ஜுனா முன்வைத்த கருத்துகள் சலசலப்பை உருவாக்கினர்.

Image source: Vikatan
இந்தப் பேட்டி எந்தப் பத்திரிகையில் வெளியானதோ அதே நிறுவனம் தான் இப்போது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு மேடையை அமைத்துக் கொடுத்துள்ளது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. அந்த நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன் ஒரு அங்கமாக இருந்துள்ளது. 'விழாவில் அரசியல் பேச வேண்டாம். நூல் குறித்து மட்டும் பேசுங்கள்’ என அறிவுறுத்தி ஆதவ் அர்ஜுனாவை அனுப்பி வைத்ததாக திருமா விளக்கம் அளித்திருக்கிறார்.
அப்படி இருந்தும் விழாவில் பங்கேற்ற பேசிய ஆதவ், “தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. 2026இல் அது அகற்றப்பட வேண்டும்” என்று அம்பேத்கர் என்று பேசி இருக்கிறார். கட்சியை விட்டு இடைநீக்கம் செய்ய பிறகு வெளியிட்ட அறிக்கையில் கூட ஆதவ், 'மன்னர் பரம்பரை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்.
ஆனால், கட்சியின் தலைவர் திருமாவளவன் அனுமதி மறுத்தும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பேசியது பற்றி அவர் எதையும் சொல்லவில்லை. திருமா அப்படி ஒரு கட்டளையைப் போட்டாரா என்பது பற்றியும் அவர் விளக்கம் தரவில்லை. தான் பேசியது சரியான கருத்துகள்தான் என்பதை உறுதி செய்வதைப் போன்றே அவரது அறிக்கை இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்தது முதலே அவர் கட்சிக்காகப் பல கோடிகளைச் செலவு செய்து வருகிறார். ’வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டிற்குக் கூட 700 கோடி வரை செலவு செய்திருக்கிறார். ஆகவேதான் அவருக்கு உடனடியாக து.பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று சில மாதங்களாகப் பலரும் ஊடகங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
அதைப் பற்றி மது ஒழிப்பு மாநாடு குறித்த விளக்கக் கூட்டங்களில் பேசிய திருமாவளவன், 'ஆதர் அர்ஜுனாதான் மாநாடு நடத்தப் பணம் கொடுத்தார் என்கிறார்கள். க்யூஆர் கோட் மூலம் நிதி அளித்தவர்கள் நீங்கள்தானே? உங்களிடம் பணம் பெற்றுத்தானே மாநாடு நடத்தினோம்’ என்று ஒரு முறை பேசி இருந்தார். இப்போது நடந்த விசிக 'மது ஒழிப்பு மாநாடு’க்குகூட ஆதவ் அர்ஜுனா நிதி அளித்ததாகச் செய்திகள் கசிந்தன. இது உண்மையா? இவர் நிதி வழங்கினாரா? என்பது பற்றி எப்போதும் ஆதவ் பேசியதே இல்லை. அமைதியாக அவர் இதை ஆமோதித்து வந்தார்.
இந்நிலையில்தான் விசிக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கெளதம சன்னா ஒரு நீண்ட விளக்கத்தை அவரது ஃபேஸ் புக்கில் வெளியிட்டுள்ளார். அதில் ஆதவ் அர்ஜுனா எப்படி கட்சிக்கு விரோதமான கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் அமைதி காத்தார் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
கெளதம சன்னா அவரது பதிவில், “கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஒரு பைசா கூட செலவு செய்யாதவர் ஆதவ் அர்ஜுன். அந்த மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகளில் எதையும் செய்யாதவர் அவர். ஆனால், இந்த மாநாட்டை அவரது விஓசி நிறுவனம் நடத்தியது என்ற பொய்யான பிம்பத்தையும் பரப்பும் விதமாக வீடியோ வெளியிட்டது ஏன்...? ஆதவ் அர்ஜுனிடம் 200 கோடி ரூபாயை திருமா வாங்கி விட்டார் என வதந்தி பரவியபோது அதை மறுத்தோ, கண்டித்தோ ஒரு அறிக்கைவிடாதது ஏன்? கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களிடம் தனக்கு ஆதரவாக இருக்கும்படி பண ஆசை காட்டி பேரம் பேசியது ஏன்? அதற்காக விவரங்களைப் பொறுப்பாளர்கள் சொல்லி இருந்தனர். அவர் அப்படிச் செய்ய என்ன காரணம்?
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு முதலில் திருமாவின் வருகையை உறுதி செய்த பிறகு நடிகர் விஜய் அழைத்து வெளியிட வைத்தது ஏன்..? அந்த புத்தகத்தை வெளியிட அவருக்குத் தகுதி இல்லையா.? நடிகர் விஜய் வெளியிட வேண்டும் என்கின்ற நிலையை ஆதவ் அர்ஜுன் உருவாக்கியது ஏன்..? இந்தச் செயல் திட்டத்தை வடிவமைத்தது யார் என்பதெல்லாம் தெரிந்துதான் ஆதவ் அர்ஜுனா மூது நடவடிக்கை எடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications