விஜயை அதிகாரப்பூர்வமாக அழைத்த.. எடப்பாடி பழனிசாமி..குறுக்கே வந்த ஆதவ் அர்ஜுனா.. இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதவ் அர்ஜுனா, அதிமுகவை ஏன் தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவின் உறுப்பினர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துவிட்டார்கள் என்பதனால், அந்தக் கட்சியை எதிர்க்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

Tamilaga vetri kazhagam vijay

அதிமுக மற்றும் பாஜக குறித்த நிலைப்பாடு: ஆதவ் அர்ஜுனா விளக்கம்

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என குர்ஆன் மீது சத்தியம் செய்து உறுதியளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகிறது.

அதிமுகவின் பல உறுப்பினர்கள் தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் அதிமுகவை எதிர்ப்பதற்கான தேவை தற்போது இல்லை என அவர் கூறியுள்ளார். அரசியல் களத்தில் கூட்டணி அமைப்பது என்பது அடிக்கடி மாறும். ஆதவ் அர்ஜுனாவின் இந்த அறிவிப்பு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எதிர்கால வியூகங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு

நேற்றுதான் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து இருந்தார். தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும். விஜய்யும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார். எனவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும், என்று நேரடியாக விஜயை எடப்பாடி பழனிச்சாமி அழைத்து இருந்தார்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை மாறி மாறி அதிமுக, பாஜக இரண்டும் நேரடியாக கூட்டணிக்கு அழைக்க தொடங்கி உள்ளன. இதனால் விஜய் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.

அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பிரம்மாண்ட கட்சி தவெக

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய் திமுகவை தீவிரமாக எதிர்த்து வருகிறார். கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவை எதிர்த்து அரசியல் செய்வேன் என்று கூறியவர் விஜய். ஆனால் திமுகவை மட்டுமே விஜய் கடுமையாக எதிர்க்கிறார். மற்றபடி அதிமுக, பாஜக இரண்டையும் எதிர்ப்பது இல்லை.

இதன் மூலம் விஜய் அதிமுக - பாஜகவிற்கு நெருக்கம் ஆகி உள்ளார். இரண்டு கட்சிகளும் பேசுவது போல.. விஜயும் பேச தொடங்கி உள்ளார். விமர்சனங்கள் செய்யும் போதெல்லாம் அதிமுக, பாஜக பெயரை தவிர்த்து திமுகவை மட்டுமே விஜய் விமர்சனம் செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை மாறி மாறி அதிமுக, பாஜக இரண்டும் நேரடியாக கூட்டணிக்கு அழைக்க தொடங்கி உள்ளன. இதனால் விஜய் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+