ஆவின் ஆரஞ்ச் விலை உயர்வு..பச்சை நிற பாலுக்கு தட்டுபாடு..பால் முகவர்கள் தலைவர் பொன்னுசாமி புகார்
சென்னை: ஆவின் பச்சை பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுபாடு ஏற்படுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.ஆவின் நிறைகொழுப்பு பால் விலை உயர்வினை சமாளிக்க முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு மாறத் தொடங்கியதால் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது என்றும் பொன்னுச்சாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆவின் நிறைகொழுப்பு பால் விலை உயர்வினை சமாளிக்க முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு மாறத் தொடங்கியதால் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

ஆனால், அதிகாரிகளோ ஆவின் பால் தினசரி விற்பனை 3லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக தவறான தகவல்களை ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சரிவடைந்த நிறைகொழுப்பு பால் விற்பனையை சரிசெய்ய நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நிறைகொழுப்பு பாலினை தான் வாங்கியாக வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களை ஆவின் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக 30ஆம் தேதி முதல் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் பால் கொள்முதல் செய்யும் ஒவ்வொரு மொத்த விநியோகஸ்தர்களுக்கும் நிலைப்படுத்தப்பட்ட பால் சுமார் 5000ம் லிட்டர் வரை குறைக்கப்பட்டுள்ளதால் பால் முகவர்களுக்கான ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் விநியோகத்தை கடுமையாக குறைத்துள்ளனர்.
அதோடு மதிய நேர விநியோகத்தில் சமன்படுத்தப்பட்ட நீல நிற பால் பாக்கெட் பால் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட் பாலினை தவிர்த்து நிறைகொழுப்பு பால் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களுக்கு ஆவின் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்களுக்கு சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழகத்தில் மக்களின் தேவைக்கு ஏற்ப பச்சை, நீல நிற பால் பாக்கெட்டுகள் கிடைப்பதாக கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications