மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் "தல" அஜித்.. நரேன் கார்த்திகேயன் அறிவிப்பு! ரசிகர்கள் செம குஷி
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், மீண்டும் கார் ரேஸில் ஈடுபட இருக்கிறார். 2025ல் ஐரோப்பியாவில் நடக்கும் GT4 சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். இது குறித்த தகவலை 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.
இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் தல என்றே அன்புடன் அழைக்கிறார்கள். இப்போது இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் விடா முயற்சி படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், அது அடுத்தாண்டு ரிலீஸாக உள்ளது.
சினிமா ஷூட்டிங்: சினிமாவில் நடித்தாலும் அதைத் தாண்டி அஜித் குமாருக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸில் தான் ஆர்வம் அதிகம். சூட்டிங் இல்லாத நேரத்தில் இதில் ஆர்வமாக ஈடுபடுவார். முன்பு இவர் கார் ரேஸிலும் ஈடுபட்டு வந்தார். அதில் மோசமான விபத்தில் அஜித் சிக்கிய நிலையில், அதன் பிறகே கார் ரேஸுக்கு குட்பை சொன்னார்.
இதற்கிடையே நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார். 2025ல் ஐரோப்பாவில் நடக்கும் GT4 சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டது. இதற்காக சில அணிகள் உடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே நடிகர் அஜீத் குமார் மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு வர உள்ளதை முன்னாள் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.
நரேன் கார்த்திகேயன்: இது தொடர்பாக நரேன் கார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "2025ஆம் ஆண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஜிடி ரேசிங் பிரிவில் மீண்டும் பங்கேற்க எனது மெகாஸ்டார் நண்பரான அஜித் குமார் கடுமையாக உழைத்து வருகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.. அவர் உண்மையிலேயே ஒரு ஜாம்பவான்.
ஒரு அற்புதமான நடிகர். கார் ரேஸிலும் அவர் மிக விரைவாகவும் செயல்படுவார். அதிக கார் ரேஸ் அனுபவம் இல்லாத போதிலும், தாமதமாகவே கார் ரேஸை தொடங்கிய போதிலும் அவர் மிகச் சிறப்பாக கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2010இல் பார்முலா 2 கார் ரேஸில் அவர் எவ்வளவு சிறப்பாக கார் ஓட்டினார் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
கார் ரேஸ்: பார்முலா 2 என்பது பார்முலா 1க்கு ரொம்ப குறைவானது எல்லாம் இல்லை.. அவரது திறமைகளுக்கு எல்லையே இல்லை. அனைத்திற்கும் மேலாக, அவர் ஒரு அற்புதமான மனிதர். வாழ்த்துகள் தல! கார் ரேஸில் நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்து உங்களை மீண்டும் கார் ரேஸ் டிராக்கிற்கு அழைத்து வர முடிந்தால் அது எனக்கு ஒரு பாக்கியமாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு உடனடியாக இன்ஸ்டாகிராம் தளத்தில் டிரெண்டானது. அஜித் குமார் ரசிகர்கள் பலரும் நரேன் கார்த்திகேயனின் இந்த பதிவைக் கொண்டாடி வருகிறார்கள். திரையில் கலக்கும் தல, ரேஸ் டிராக்கிலும் கலக்குவார் என்றே ரசிகர்கள் பலரும் கூறி வருகிறது.
அதேநேரம் அரசியலுக்குச் செல்வதால் விஜய்யும் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது கடைசி படம் அடுத்தாண்டு இறுதியில் வெளியாகிறது. இந்த நேரத்தில் அஜித்தும் சினிமாவுக்கு பிரேக் எடுத்துவிட்டு கார் ரேஸில் ஈடுபட போய்விட்டால், இரு உச்ச நட்சத்திரங்கள் இல்லாத சூழல் ஏற்படும் என்றும் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications