ஓபிஎஸ் அணியில் இணைந்தேனா?.. நான் அதிமுக மெம்பரே கிடையாதுங்க.. யூடர்ன் அடித்த பாக்யராஜ்
சென்னை: நான் அதிமுகவின் உறுப்பினரே கிடையாது. ஓபிஎஸ்தான் என்னை கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினார் என நடிகர் பாக்யராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பாக்யராஜ். இவர் அதிமுகவிலும் பாஜகவிலும் இணைந்திருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், சென்னை ராயப்பேட்டையில் ஒரு ஹோட்டலில் ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஓபிஎஸ் அணியில் இணைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது பாக்யராஜ் செய்தியாளர்களையும் சந்தித்தார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா
அவர் பேசுகையில எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் அதிமுகவை எப்படி விட்டுவிட்டு சென்றார்களோ, அதே போல அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எம்ஜிஆர் உடல்நலமில்லாமல் இருந்த போது அரசியல் மேடைகளில் பேசியுள்ளேன். அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்துள்ளேன்.

ஒற்றுமை
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாக்யராஜ் ஓபிஎஸ் அணியில் இணைந்தது குறித்த விஷயத்தில் மாற்றி பேசியுள்ளார். அவர் ஒரு தொலைகாட்சி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் நான் அதிமுகவில் இன்னமும் உறுப்பினரே கிடையாது.

கட்சி பலவீனமாகிவிடக் கூடாது
கட்சி பலவீனமாகிவிடக் கூடாது என்பதற்காகவும் மற்ற கட்சிகளால் எம்ஜிஆரின் கட்சியை ஏளனமாக விமர்சிக்கும் நிலைக்கு சென்று விடக் கூடாது என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. அதனால் கட்சி நல்லா இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த சூழலில எனக்கு ஓபிஎஸ்ஸிடம் இருந்து இரு முறை அழைப்பு வந்தது. அப்போது நான் வெளியூரில் இருந்தேன்.

ஓபிஎஸ்ஸுடன் சந்திப்பு
இதனால் சென்னை திரும்பியதும் ஓபிஎஸ்ஸை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக ராயப்பேட்டை ஹோட்டலுக்கு தனியாக சென்றேன். அப்போதும் என்னை கட்சியில் சேருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார் என ஹோட்டலில் நடந்தவற்றை விவரமாக தெரிவித்துள்ளார் பாக்யராஜ். ஓபிஎஸ் அணியில் இணைவதாக செய்திகள் வெளியான போதே அவர் மறுப்பு தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications