இரட்டை இலைக்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்த போண்டா மணி! எட்டிக்கூட பார்க்காத அதிமுக நிர்வாகிகள்!
சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணியை, அதிமுக சார்பில் எந்த நிர்வாகியும் சந்தித்து நலம் விசாரிக்கவில்லை.
இத்தனைக்கும் நடிகர் போண்டா மணி ஒரு அதிமுககாரர் என்பதும் தேர்தலின் போது இரட்டை இலைக்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மனிதாபிமானத்துடன் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து தைரியம் ஊட்டியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

சிறுநீரகப் பிரச்சனை
நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அவரது நண்பர்களும், மருத்துவர்களும், சட்டப்படி செய்து வருகின்றனர். இந்நிலையில் உடல் நலிவுற்று மன வலிமை இழந்து காணப்படும் நடிகர் போண்டா மணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நம்பிக்கை அளித்திருக்கிறார்.

கண்டுகொள்ளாத அதிமுக
எந்தக் கட்சியை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்தாரோ இன்று அதே கட்சியின் ஆட்சியில் உயர் தர சிகிச்சை பெற்று வருகிறார் போண்டா மணி. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், அதிமுக சார்பில் எந்த ஒரு நிர்வாகியும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வரவில்லை என்பது தான். போண்டா மணி அதிமுகவுக்காக தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ததுடன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பெஞ்சமின் உட்பட பலருக்கும் இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டு வீதி வீதியாக நடந்து சென்றார் போண்டா மணி. கடைசியில் கட்சிக்காரர்கள் உதவ முன்வராவிட்டாலும் கூட நலம் விசாரிக்க கூட யாரும் முன்வரவில்லை என்பது தான் வேதனை. தன்னை சந்தித்து நலம் விசாரிக்க அதிமுகவிலிருந்து யாரும் வரவில்லை என்ற மன வருத்தம் இருந்தாலும் கூட அதனை போண்டா மணி வெளிக்காட்டவில்லை.

நடிகர் சங்கம்
இதனிடையே நடிகர் சங்கம் சார்பில் போண்டா மணிக்கு ஏதேனும் உதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 240 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக போண்டா மணி நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு











Click it and Unblock the Notifications