சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நைஸா" மேட்டருக்கு வந்த நடிகர் ராதாவி.. பள்ளத்துல மாட்டிக்கிட்டு முழிக்கிறது யாரு.. கடைசியில பஞ்ச்

நடிகர் ராதாரவி, மத்திய மற்றும் மாநில அரசை சீண்டி பட விழாவில் பேசியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ராதாரவி, மறுபடியும் அரசை சீண்டி பேசியுள்ளார்.. திரைப்பட விழா ஒன்றில் ராதாரவி பேசியது இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் ஒரு ரவுண்டு அடித்து வந்துவிட்டார் ராதாரவி... அதிமுக, பிறகு திமுக, மறுபடியும் அதிமுக, தற்சமயம் ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்..!

ஆனால், இவர் பாஜகவில் சேர்ந்த நேரமே, ஏகப்பட்ட சர்ச்சைகள், பிரச்சனைகள், விவாதங்களை இழுத்து கொண்டு வந்துவிட்டார்..

ஓபிஎஸின் அடுத்த “ஆக்‌ஷன்”.. பிரபலத்தின் வாரிசுக்கு முக்கிய பதவி! நடிகர் வேல ராமமூர்த்தி மகனா இது? ஓபிஎஸின் அடுத்த “ஆக்‌ஷன்”.. பிரபலத்தின் வாரிசுக்கு முக்கிய பதவி! நடிகர் வேல ராமமூர்த்தி மகனா இது?

 தேங்காய்மூடி கட்சி

தேங்காய்மூடி கட்சி

"தேங்காய் மூடி கட்சி" என்று சொந்த கட்சியான பாஜகவை பொது மேடையிலேயே இவர் பேசியது பெரும் சர்ச்சையானது... பொதுவாக பாஜகவில் யார் சேர்ந்தாலும், அந்த கட்சி மிகப்பெரிய பொறுப்பை தந்து அழகு பார்க்கும்.. ஆனால் ராதாரவிக்கு ஏன் கடைசிவரை முக்கிய பொறுப்பு தரவில்லை என தெரியவில்லை.. ஒருவேளை இவரது திராவிடர் கட்சிக்கான பிம்பம் இன்னும் உடையவில்லையா அல்லது திராவிடர் கழகங்களில் இருந்து தாவி வந்த பிரமுகரை பாஜக இன்னும் நம்பவில்லையா என தெரியவில்லை.

 லோக்கல் சரக்கு

லோக்கல் சரக்கு

அந்தவகையில் அரசியல் மேடைகளை, சினிமா நிகழ்ச்சிகளில் மட்டுமே அதிகம் தென்பட்டு வருகிறார் ராதாரவி.. சினிமா விழாக்களில் இவர் பங்கேற்கும்போது, "லைட்"டாக அரசியல் பேசி ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போவார்.. இப்படித்தான், 2 மாதங்களுக்கு முன்பு லோக்கல் சரக்கு என்ற ஒரு பட விழாவில் ராதாரவி கலந்து கொண்டார்.. அப்போது பேசியபோது, "லோக்கல் சரக்கு என்று நாம ரொம்ப சீப்பா சொல்லக்கூடாது.. காரணம், லோக்கல் சரக்கு இல்லாவிட்டால் அரசாங்கம் இயங்க முடியாது.. எங்கே, கடையை மூடசொல்லுங்க பார்ப்போம்.. யாராவது மூடறாங்களான்னு பார்ப்போம்.. கடையை மூடினால் நாறிப்போயிடும்.. ஏனென்றால் பெரிய வருமானம் அது..

 ராதாரவி ஷாக்

ராதாரவி ஷாக்

ஒருமுறை குடிச்சதையே மறந்துட்டு, 2வது முறை குடிக்கிறானுங்க.. அந்த இடத்தை போய் விடுவாங்களா? சினிமாவை ஜனங்க இப்பொவெல்லாம் பார்க்கிறதே கிடையாது.. ஆனால் அந்த கடையில இருக்கிற கூட்டம் எங்கேயுமே கிடையாது.. சரக்கு எங்கேடா தீர்ந்துவிடப்போகிறதோ என்று நினைத்து, கியூவில் முன்னாடி இருக்கிறவன் தலைமேல் மிதித்து நடந்து போய் சரக்கு வாங்கறான்.. முன்னாடியெல்லாம் இப்படித்தான் தியேட்டரில் டிக்கெட் வாங்குவாங்க.. இப்போ அந்த கடையில்தான் கூட்டம் நிறைகிறது" என்று பேசியிருந்ததை நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

 400 ஃபிலிம்

400 ஃபிலிம்

அப்படித்தான் நேற்றுகூட ஒரு படவிழாவில் பேசினார்.. "நான் 400 படங்களில் இதுவரை நடித்துள்ளேன்.. அதுக்காக அடுத்த படம் கணக்கில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.. 400 படங்களைவிட 401வது படம் முக்கியம் என்று நினைப்பேன்.. இந்த விழாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும், வீட்டுக்கு வந்து பத்திரிகை வைக்கிறேன்" என்று டைரக்டர் சொன்னார்.. நான்தான், போன் பண்ணி கூப்பிட்டாலே போதும் என்றேன்.. ஏன் என்றால் இதெல்லாம் தேவையில்லாத ஃபார்மாலிட்டி..

 டைம் வேஸ்ட்

டைம் வேஸ்ட்

வீட்டுக்கு வந்து பத்திரிகை வைப்பது, கூப்பிடுவது என்பதெல்லாம் தேவையேயில்லை.. இதெல்லாம் டைம் வேஸ்ட்.. நேரத்தை வீணாக்காதீங்க.. அதுவும் இப்போவெல்லாம் இந்த டிராபிக்கை தாண்டி போய் வருவதற்குள், போதும் போதும் என்றாகிவிடுகிறது.. நான் இங்கிருந்து போவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரமாகிடும்.. ரோடெல்லாம் சர்ருன்னு போற மாதிரியா இருக்கு? இந்த பக்கம் மாநில அரசு தோண்டி வைக்குது.. அந்த பக்கம் மத்திய அரசு தோண்டி வைக்குது.. நடுவுல பள்ளத்தில் மாட்டிக்கட்டு முழிக்கிறது வெறும் வாக்காளர்கள் மட்டும்தான்.." என்று ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போனார் ராதாரவி.

English summary
Actor Radharavi slams central and Tamil Nadu government indirectly in Chennai film Function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X