எனக்கு தமிழ் மட்டும் தாங்க தெரியும்..தமிழ்ல தானே பேசுறேன்!பட்டென பேசிய சிவகார்த்திகேயன்! என்னாச்சு?
சென்னை : இந்தி திணிப்பு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் என்றும், தமிழில் தானே பேசுகிறேன் என கூறிவிட்டு வேகமாக சென்றார்.
Recommended Video
இந்தி மொழி பிரச்சினை அரசியல் என்பதை தாண்டி சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக பலரும் புகார் கூறி வரும் நிலையில், எனக்கு தமிழ் மட்டுமே தெரியும், தமிழில் தானே பேசுகிறேன் என நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் சிறப்பு நேர்காணலை எடுத்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவரசியாம பதில்களை சிவகார்த்திகேயன் கூறினார்.

வாய்ப்பு மறுப்பு
தமிழ் திரையுலகில் புதிய மற்றும் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் படுவதாகவும் கூறப்படும் கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ஒரு சினிமா என்பதற்கு பிறகு வியாபாரம் போன்ற நிறைய காரணங்கள் உள்ளது ஒவ்வொரு முடிவும் க்ரியேட்டிவிட்டி சம்பந்தப்பட்டு எடுக்க முடியாது வியாபாரம் சம்பந்தப்பட்டும் தான் எடுக்கப்படும்.

வெற்றி முக்கியம்
அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக இருந்தால் இவ்வளவு பெரிய மேடை கிடைத்திருக்காது. வியாபார ரீதியாக அறிமுக இயக்குனர்களின் படங்கள் வெற்றி அடையும் போது நிறைய பேர் இதுபோன்ற படங்களை எடுக்க முடியும். வாய்ப்பும் முக்கியம் இயக்குனர்களின் வெற்றியும் முக்கியம்

தமிழ் சினிமாவின் டான்
தமிழ் சினிமாவின் தான் என திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவின் தான் என தன்னை கூறியது ஜாலியாகத்தான் எனவும் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார்.

தமிழ் தான் தெரியும்
தற்போதைய கால கட்டங்களில் இந்தி திணிப்பு அதிகமாக இருப்பது குறித்தும் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்திக்கு ஆதரவாகப் பேசி வருவது குறித்த கேள்விக்கு கேள்வியை கேட்டவுடன் வேகமாக புறப்பட்ட சிவகார்த்திகேயனை செய்தியாளர் விடாமல் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் எனக்கு தமிழ் தான் தெரியும் நான் தமிழில்தான் பேசுவேன் என கூறிவிட்டு வேகமாக புறப்பட்டுச் சென்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications