குழந்தைக்கு உடம்பு சரியில்லை..கெஞ்சிய நடிகர் ஸ்ரீகாந்த்! நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு! இப்போ ஜெயில்ல
சென்னை: போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், ஜாமின் வழங்க நீதிபதி மறுத்ததாகவும், போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக நாயகனாக நடித்து வருபவர் ஸ்ரீகாந்த். ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து பார்த்திபன் கனவு, போஸ், வர்ணஜாலம், ஜூட், சதுரங்கம், ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தொடர்ந்து நாயகன் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இரண்டாவது ஹீரோவாகவும் நண்பன் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். சமீபத்தில் கூட அவர் நடித்த இரு திரைப்படங்கள் வெளியானது. இந்த நிலையில் தான் போதை பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக பிரதீப் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் பிரமுகரான பிரசாத் என்பவரிடம் போதை பொருள் வாங்கியதாக கூறினார். இதை அடுத்து பிரசாத்தை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல திரைப்பட நடிகர்கள் போதைப்பொருள் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 40 முறை போதை பொருளை விற்றதாக கூறினார்.
இதை அடுத்து ஸ்ரீகாந்தை அழைத்து வந்த போலீசார் அவரது ரத்த மாதிரிகளை சோதனைக்காக அனுப்பினர். அதில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் சில நடிகர்களிடம் போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றனர். ஒரு கிராம் 12,000 ரூபாய் என்ற விலைக்கு 40 முறை சுமார் 4 லட்சத்திற்கும் மேல் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியது தெரிய வந்தது. மேலும் 72 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் பரிவர்த்தனை செய்த ஆதாரங்களும் சிக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்தை நீதிபதி முன்பு போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என முறையிட்டார் ஸ்ரீகாந்த். தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், வெளிநாடு எங்கும் செல்ல மாட்டேன் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைப்பேன் என உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் போதை பொருளை வாங்கி தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் வேறு யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால் ஸ்ரீகாந்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
இதை அடுத்து ஸ்ரீகாந்த் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர். ஸ்ரீகாந்த் உடன் போதை பொருள் வாங்கி பயன்படுத்திய நடிகர்கள் யார் யார்? ஸ்ரீகாந்த் எத்தனை ஆண்டுகளாக போதைப் பொருளை பயன்படுத்தி வருகிறார்? யார் மூலம் எல்லாம் போதைப் பொருள் வாங்கப்பட்டது? சென்னையில் உள்ள பப்கள், பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த இருக்கின்றனர்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications