நேத்து கட்சி ஆரம்பித்த விஜய்! ஏற்றுக் கொள்ளுமா பாமக - தேமுதிக! ’அண்ணன்’ வேற செம கோபத்துல இருக்காரே!
சென்னை: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தற்போதைய கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து வருகிறது. அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் பாமக தேமுதிக தனது கூட்டணியில் இணைக்கலாம் என நடிகர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்க மறைமுக பேச்சுவார்த்தைகளை விஜய் துவங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் தலைமையை, பல ஆண்டுகளாக களத்தில் இருக்கும் மூன்று கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மிகவும் பரபரப்பாக இருக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம். கூடுதலாக அமித்ஷாவின் வருகையும் பரபரப்பை மேலும் கூட்டி இருக்கிறது. எப்போதும் போல திமுக சட்டமன்ற தேர்தல் வேலைகளை முதன் முதலாக துவக்கி விட்டது.
பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனைக் கூட்டம், மாநாடு, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் கூட்டம் என தீவிரமான களப்பணியாற்றி வருகின்றனர் திமுக அமைச்சர்கள். மேலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கூட்டணியையும் கிட்டத்தட்ட உறுதி செய்து இருக்கிறது திமுக. 2019 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளே மீண்டும் தொடர்கின்றன. கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு கட்சிகள் வரலாம் என சொல்லப்படுகிறது. இருந்த போதும் தற்போதைய சூழலில் கூட்டணிகள் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொமதேக, மநீம உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் களமிறங்குகின்றன.
ஆனால் எதிர்க்கட்சியான அதிமுகவோ வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்பு மட்டுமே தற்போது இருக்கிறது. அதாவது ஓரளவு வாக்கு சதவீதத்தை கொண்டிருக்கும் பாமகவையும் தேமுதிகவையும் கூட்டணிக்கு அழைத்து வருவதுதான். மற்றபடி ஒரு சில சிறிய கட்சிகள் நிச்சயம் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கும். இந்த நிலையில் மாநிலங்களவை சீட்டு விவகாரம் தொடர்பாக தேமுதிக பாமகவும் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கின்றன.
இதனால் அவர்கள் திமுகவை நோக்கி செல்லக்கூடும் என சொல்லப்படுகிறது. இது ஒரு படம் இருக்க தமிழக அரசியலில் புது வரவான விஜய், தனது தலைமையில் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் கூட்டணிக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை விஜயுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சிகளுடன் விஜய் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதே நேரத்தில் பல்வேறு விவகாரங்களில் விஜய் உடன் பிற கட்சிகள் விலகி இருக்கின்றன. குறிப்பாக நாம் தமிழர் கட்சி சீமான் விஜயை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜயின் பெரியார் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு ஆகவே ஆகாது என்கின்றனர்.
மேலும் விஜயின் பல படங்களுக்கு பாமக தரப்பில் நெருக்கடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சமூக நீதி, சுற்றுச்சூழல், பெண் கல்வி உள்ளிட்ட சில விவகாரங்களில் விஜயும் அன்புமணியும் ஒத்துப் போவதால் கூட்டணிக்கு ஓரளவு வாய்ப்பு இருக்கிறது. மேலும் தேமுதிக விஜய் தலைமையிலான கூட்டணியை ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரண்டும் மூன்று சட்டமன்ற தேர்தல்களையும், மக்களவைத் தேர்தல்களையும் தேமுதிக சந்தித்து இருக்கிறது.
கடந்த தேர்தலில் புதிய கூட்டணிக்கு தலைமையும் வகித்தது. இதனால் கூட்டணியின் தலைவராக விஜயை பிரேமலதா விஜயகாந்த் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பலமுறை அரசியலில் நான் தான் சீனியர் என பிரேமலதா விஜயகாந்த் மகனும் பேசி வந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு கூட்டணி தலைமை குறித்து முடிவு செய்து கொள்ளலாம் தற்போதைக்கு ஒரே அணியாக தேர்தலை சந்திப்பது நலம் என நினைத்தால் கூட்டணி அமையலாம் என்கின்றனர்.
ஆனால் அதற்கு விஜய் ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும் வயதிலும் அனுபவத்திலும் இளையவரான விஜயை, 3 கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கூட்டணியின் தலைமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications