கணபதி ஐயர் “பேக்கரி”.. சூர்யா சிவா - டெய்சி அக்கா தம்பி “டீலிங்”.. வடிவேலு காமெடியை இழுத்த கஸ்தூரி
சென்னை: பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா, அக்கட்சியை சேர்ந்த டெய்சியை தரக்குறைவாக பேசிய செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் சமாதானம் ஆகி சூர்யா என் தம்பிமாதிரி என டெய்சி சொன்னதை பேக்கரி பிஸ்னஸ் என விமர்சித்து இருக்கிறார் நடிகையும் பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி.
பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கும் பாஜகவை சேர்ந்த சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையே கட்சியில் பொறுப்புகளை வழங்குவது தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக டெய்சியிடம் செல்போனில் தொடர்புகொண்ட சூர்யா சிவா அவரை தகாத வார்த்தைகளில் இழிவாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு ஆடியோ
டெய்சியிடம் செல்போனில் பேசிய சூர்யா சிவா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரது பெயர்களை பயன்படுத்தியது கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

காயத்ரி ரகுராம் விமர்சனம்
பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராமும் இந்த ஆடியோவை பகிர்ந்து சூர்யா சிவாவை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் வெளியிட்ட பதிவில், "பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை ஆக்சன்
இதனை தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்." என்று அறிவித்தார். அதேபோல் "ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்." என்றும் உத்தரவிட்டார்.

கஸ்தூரி காட்டம்
இந்த நிலையில் நடிகையும் பாஜக ஆதரவாளருமான கஸ்தூரி, பீப் இல்லாத ஆடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, "அறுத்து மெரினா வில் எறிஞ்சுருவோம்; நட்டா, மோடி, அண்ணாமலை யார் கிட்டே வேணா போ; *** பதவி வாங்கின உனக்கே திமிருன்னா... என் ஜாதிக்கு எனக்கு எவ்வளவு இருக்கணும்; பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலென்றென்றால்... அதை விட மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை.

பழைய ஆடியோ
2 மாதம் பழைய ஆடியோவில் திருச்சி சூர்யா சிவா, பாஜக சிறுபான்மை அணித் தலைவரை கொலை மிரட்டல் விடுப்பதுடன், பாலியல் அச்சுறுத்தலையும் விடுக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, ஜேபி நட்டா, அண்ணாமலை யாருமே தப்பவில்லை. ஆடியோ வெளியானதில் இருந்தே நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பேசியதற்காக காயத்ரி ரகுராம் தண்டிக்கப்பட்டு உள்ளார். சூர்யா மென்மையாக விடப்பட்டு விட்டார்." என்று விமர்சித்து இருந்தார்.

அக்கா - தங்கை
இந்த நிலையில் நேற்று முந்தினம்திருச்சி சூர்யாவும் டெய்சியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டெய்சி திருச்சி சூர்யா தனக்கு தம்பியை போன்றவர் என்றும், தங்களுக்கு இடையே அக்கா - தங்கை போன்ற உறவு உள்ளது என்றும் கூறினார். இந்த நிலையில், சூர்யா சிவாவை கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

கஸ்தூரி கேள்வி
இதுகுறித்து ட்விட்டரில் நேற்று முந்தினம் பதிவிட்ட நடிகை கஸ்தூரி, "என்னது தம்பியா?! அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. டெய்சிக்க்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே.. இனி பாஜக ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! #உவ்வே" என்று பதிவிட்டார்.

பேக்கரி பிசினஸ்
இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், "பேக்கரி பிசினஸுக்கு மத்தியில் அழகிரி - ரூபி மனோகரன் இடையேயான பிரச்சனையை முழுவதுமாக மறந்துவிட்டார்கள். ரூபி மனோகரனின் சஸ்பென்சன் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. திடீரென மேலே வந்தவர்கள் உண்மையானவர்களை மறைப்பது பற்றி எப்படி சிந்திக்க முடியும். என்ன பேக்கரி என்று என்னிடம் கேட்காதீர்கள். அந்த அக்கா தம்பி டீலிங் பற்றி கேள்விப்படாதவர்கள் ட்விட்டருக்கே லாயக்கு இல்லை." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications