சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசு வேலைக்கு இழப்பு வராது என்ற இறுமாப்பா?.. கஸ்தூரிக்கு வந்த ஆவேசம்..வியந்துபோன நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வேலைக்கு எந்த இழப்பும் வராது என்ற இறுமாப்பா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்

நாட்டின் 73-வது குடியரசு தின தின விழா இன்று கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இதனையொட்டி மத்திய, மாநில அரசுகளின் சார்பிலும், அனைத்து அலுவலகம், அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயல்

ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயல்

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின தின விழா கொண்டாடப்பட்டது.
ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பலர் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இது கடும் சர்ச்சைக்கு உள்ளானது.

தமிழக அரசை விட மேலானவர்களா?

தமிழக அரசை விட மேலானவர்களா?

இது தொடர்பாக கேட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றமே உத்தரவிட்டிருப்பது. பிறகு ஏன் எழுந்து நிற்க வேண்டும்? என்று வங்கி அதிகாரிகள் சிலர் விளக்கம் கூறியதாக தெரிகிறது. இதனால் சர்ச்சை மேலும் அதிகமானது. பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அரசின் அரசாணையை பொருட்படுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழக அரசை விட மேலானவர்களா? என்று திமுக எம்.பி கனிமொழியும் கடுமையாக சாடினார்.

நடிகை கஸ்தூரி கண்டனம்

நடிகை கஸ்தூரி கண்டனம்

இந்த நிலையில் தமிழை அவமதித்த ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
வடக்கத்திக்காரர்கள் ,புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ்த்தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரபூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள்.

இறுமாப்பா?

இறுமாப்பா?

மத்திய அரசு வேலைக்கு எந்த இழப்பும் வராது என்ற இறுமாப்பா? அரசாணையை மீறிய குற்றத்துக்கு தண்டனையோ அபராதமோ விதிக்க வேண்டும்! Shocked to see Tamilians working in TamilNadu disrespecting the official Tamil State song. We must respect each state and it's official policies என்று கஸ்தூரி கூறியுள்ளார். ''மேடம் நீங்களா இது'' என்று பலரும் வியந்து கஸ்தூரி ட்வீடுக்கு கிழே கமெண்ட் செய்து வருகின்றனர்.

English summary
Actress Kasturi has condemned the Reserve Bank employees who did not stand up and pay their respects to the tamil thai valthu. Is it arrogance that there will be no loss of federal government jobs? she questioned
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X