சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை, , தஞ்சை உள்ளிட்ட.. 11 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள் என்னென்ன?.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வருகிற 21-ம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருந்த 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன.

கூடுதல் தளர்வுகள்

கூடுதல் தளர்வுகள்

இந்த நிலையில் இந்த 11 மாவட்டங்களுக்கும் கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

பிளம்பர்கள்

பிளம்பர்கள்

மின்பணியாளர்கள் மற்றும் பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் புரிபவர்கள் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர். எனினும் இந்த கடைகள் திறக்க அனுமதியில்லை.

கார்கள் இயங்க அனுமதி

கார்கள் இயங்க அனுமதி

மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) அகாலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செய்லபடும். வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் பயணிகள் இ-பதிவு செய்து பயணம் செய்யலாம். வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகளும் அனுமதிக்கப்படுவர்.

வேளாண் உபகரண கடைகள்

வேளாண் உபகரண கடைகள்

வேளாண் உபகரணங்கள் மற்றும் பம்புசெட் பழுது நீக்கும் கடைகள்(விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மண்பாண்டம் மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி பொருட்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

English summary
Additional relaxations have been announced for 11 districts in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X