சென்னையில் அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி.. 3 பேர் கைது.. வெளியானது சிசிடிவி வீடியோ!
சென்னை: அம்பத்தூரில் அதிமுக பிரமுகர் மூர்த்தியை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் அதிமுக பிரமுகர். இவர் தனது வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. வெட்டி விட்டு தப்பியோட முயற்சித்த அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்த போது ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பொதுமக்கள் கடுமையாக தாக்கினர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியோடு உயிர் தப்பிய அவரை மீட்டு வானகரத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களால் தாக்கப்பட்ட கூலிப்படையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயசேகர் (23), முத்து (23), ராஜீ (19) ஆகிய மூவரை கைது செய்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.