தாயை பார்க்க வானகரம் அப்பல்லோ சென்றேன்.. டிராபிக்கில் என்னை சூழ்ந்த அதிமுகவினர்- திருமா நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வானகரம் மருத்துவமனையில் எனது தாயை பார்க்க சென்றபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய போது அதிமுகவினர் என்னை சூழ்ந்து கொண்டு கைகுலுக்கியது நெகிழ்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    OPS கோபம்....கோஷமிட்டபடி பாதியிலேயே வெளிநடப்பு | ADMK பொதுக்குழு | * Politics

    அதிமுக பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் இன்று காலை நடைபெற்றது. பொதுக் குழு கூட்டத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர். மேலும் அமைந்தகரை அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.

    இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை- மதுரவாயல் இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காலையில் அலுவலகம் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்தை சந்தித்தன.

    கைகுலுக்கியது நெகிழ்ச்சி

    கைகுலுக்கியது நெகிழ்ச்சி

    அதிமுகவினர் தனக்கு கைகுலுக்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் சென்னை வானகரம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாயை காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.

    அதிமுகவுடன் கூட்டணி

    அதிமுகவுடன் கூட்டணி

    அப்போது அதிமுகவினர் என்னைச் சூழ்ந்து கொண்டு கைக்குலுக்கியது நெகிழ்ச்சி அளித்தது என தெரிவித்திருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா இருந்த போது அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைத்தது. இதையடுத்து இந்த கூட்டணி முறிவு வந்து திருமாவளவன் திமுகவுடன் கூட்டணி வைத்தார்.

    திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    தற்போதும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார். திருமாவளவனின் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சி பணியில் எத்தனை பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தை கவனிப்பதில் திருமாவளவன் தவறியதே இல்லை. சாப்பிடக் கூட நேரமில்லாமல் கட்சி பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கும் திருமாவளவன் நேரம் கிடைத்த போதெல்லாம் தாயின் கைவண்ணத்தில் சாப்பிடுவார்.

    அக்கா மரணம்

    அக்கா மரணம்

    இவருக்கு ஒரு அக்காவும் இருந்தார். அவர் பெயர் பானுமதி. அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பலியாகிவிட்டார். தனது அக்கா தன்னை விட வயது வித்தியாசம் அதிகம் என்பதால் அவரும் ஒரு தாய் என அடிக்கடி கூறுவார். அவரது இறப்பு திருமாவளவனை புரட்டி போட்டுவிட்டது. தம்பிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அக்கா எனும் அம்மா என்றுதான் அழைப்பார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+