சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏங்க.. என்ன பிரச்னை.. நல்லா பண்ணீங்க.. திமுகவை இப்டி சொல்லலாமா".. எடப்பாடியிடமிருந்து பறந்த போன்கள்

ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுக்கு எதிரான ஒரு அஸ்திரத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எடப்பாடியிடம் இருந்து போன் பறந்து கொண்டிருக்கிறதாம்..!

பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கிறது அதிமுக.. குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் கிளம்பி உள்ளது..

ஒருபக்கம் உட்கட்சி பூசல், மறுபக்கம் ரெயிடுகள், இதற்கு நடுவில் சசிகலாவின் அதிரடி, எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் வளர்ச்சி என நாலாபக்கமும் தடுமாறி கிடக்கிறது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் சூப்பர் வசதி.. டெஸ்ட் எடுத்த 13 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட்சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் சூப்பர் வசதி.. டெஸ்ட் எடுத்த 13 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட்

 சலுகைகள்

சலுகைகள்

எனினும், அதிமுக அறிவித்த சில சலுகைகள் இன்னமும் கிடப்பிலேயே உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் உள்ளதை திமுக நிறைவேற்றவில்லை என்ற ஒரு பிரச்சனையை கிளப்பி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.. ஆட்சிக்கு வந்த 2 மாசத்திலேயே எல்லா அறிவிப்பையும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று நினைப்பது சாத்தியமா? அதுவும், கஜானாவை சுத்தமாக காலி செய்து விட்டு போன பிறகு திமுக அரசு எப்படி அறிவிப்புகளை அறிவிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கேள்விகளை எழுப்பி கொண்டுதானிருக்கிறார்கள்.. ஆனால், அதிமுக எதையுமே காதில் போட்டுக் கொள்வது தெரியவில்லை..

 கஜானா

கஜானா

அத்துடன் மளமளவென சரிந்து கொண்டிருக்கும் கட்சியின் செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும், நிர்ப்பந்தத்திலும் அதிமுக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளதாலும், தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டிய அவசியமும் அதிமுகவை சூழ்ந்து உள்ளது... அதுமட்டுமல்ல, திமுகவுக்கு முக்கிய அதிமுக நிர்வாகிகள் தாவி கொண்டிருக்கும் நிலையில், அதையும் தடுத்து நிறுத்த வேண்டிய நெருக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

அதிருப்தி

அதிருப்தி

அதாவது, தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் தொடர்பு இல்லாத போதுதான் , நிர்வாகிகள் அதிருப்தியடைகிறார்கள் என்றும், அந்த அதிருப்திதான் திமுகவினர் தங்கள் கட்சிக்கு வாருங்கள் என அழைக்கும்போது திமுக பக்கம் செல்ல அவர்களை யோசிக்க வைக்கிறது என்றும், அதனால் மாவட்ட நிர்வாகிகளிடம் மனம் திறந்து பேசி அவர்களின் குறைகளைக் கேளுங்கள் என்றும் எடப்பாடிக்கு யோசனை சொல்லியிருக்கிறார் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.

 திமுக

திமுக

எடப்பாடி ஆட்சியின் போது உளவுத்துறையில் பணி செய்து ஓய்வு பெற்ற உயரதிகாரி அவர். தேர்தல் நேரத்திலும் பல வியூகங்களை வகுத்து தந்தவர் அந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ்! அவரது யோசனையின் படி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் பேசி பிரச்சனைகளையும் கேட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. அதுமட்டுமல்ல, அப்படி பேசும்போது, "திமுகவுக்கு எதிராக கவன ஈர்ப்பு பதாகை போராட்டத்தை சிறப்பாக செய்தீர்கள்" என்று நிர்வாகிகளை மனம் திறந்து பாராட்டுகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

 விமர்சனம்

விமர்சனம்

இதனால் மனம் குளிர்ந்து போகிறார்களாம் நிர்வாகிகள்... இப்படிப்பட்ட பேச்சின் போது தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர், "கருணாநிதி தலைமையிலான 2006-2011 ஆட்சியை நம் அம்மா, "மைனாரிட்டி" அரசு என்றுதான் விமர்சிப்பார். ஆட்சி முடியும் வரை திமுக அரசை அப்படித்தான் அழைத்தார்... அந்த பாணியில், "பொய் வாக்குறுதி திமுக" என்று இப்போ நாம் அழைக்கலாம் அண்ணே... அதை நீங்கள் சொல்ல ஆரம்பிச்சா கட்சிக்காரங்க எல்லோரும் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க என்று சொல்லியிருக்கிறார்கள்.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "நல்ல யோசனைதான் ஓபிஎஸ்சிடம் பேசுகிறேன்" என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. ஒருவேளை ஓபிஎஸ்சும் இதற்கு உடன்பட்டால், திமுக அரசை இனி, பொய் வாக்குறுதி அரசு என்று எடப்பாடி விமர்சிப்பார் என்றே எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 அதிமுக

அதிமுக

அதுசரி.. இப்படி திமுகவை அழைப்பதாலேயே அக்கட்சிக்கு டேமேஜ் சேர்ந்துவிடுமா? அல்லது வாக்குறுதிகளை நிறைவேற்றாதவரை இப்படி வேண்டுமானால் அதிமுக இப்படி சொல்லலாம்.. ஒருவேளை பட்ஜெட் ஆரம்பித்து திமுக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டால், அதற்கு பிறகு எடப்பாடி தரப்பு என்ன செய்யும்? தெரியவில்லை.. பார்ப்போம்.

English summary
ADMK Edapadi Palanisamys next level Plan against DMK MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X