சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“வார்னிங்”.. துரோகிகள் கூட்டம் வருது! அதிமுக மாஜி “சிக்னல்”.. ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கும் கண்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்து இருக்கிறார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி சென்னை மெரினாவில் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

கோவையில் அதிமுக உண்ணாவிரதம்.. பக்கத்து கடையில் விற்று தீர்ந்த பஜ்ஜி, வடை.. நிழலாடிய மன்னன் பட காமெடிகோவையில் அதிமுக உண்ணாவிரதம்.. பக்கத்து கடையில் விற்று தீர்ந்த பஜ்ஜி, வடை.. நிழலாடிய மன்னன் பட காமெடி

மெகா கூட்டணி

மெகா கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய மெகா கூட்டணியை ஏற்படுத்த உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் அதில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெறும்." என அவர் தெரிவித்தார்.

ஒற்றைத் தலைமை பிரச்சனை

ஒற்றைத் தலைமை பிரச்சனை

அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கடந்த 6 மாதங்களாக உட்கட்சிப்பூசல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஜூன் 11 ஆம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

 உத்தரவு ரத்து

உத்தரவு ரத்து

தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஆனார். இதனை தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக பதவியை தனதாக்கிக்கொள்ள திட்டமிட்டார் எடப்பாடி பழனிசாமி. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இடைக்கால தடை

இடைக்கால தடை

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு நம்பிக்கை எற்பட்டு அடுத்தடுத்த வேலைகளில் அவர்கள் இறங்கி இருக்கின்றனர். டெல்லியின் ஆதரவும் தங்களுக்கே இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் இபிஎஸ் நகர்வு

ஓபிஎஸ் இபிஎஸ் நகர்வு

தமிழ்நாடு முழுவதும் தனது ஆதரவாளர்களை நியமனம் செய்து வரும் அவர், விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் திட்டமிட்டு உள்ளார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியும் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து உள்ளார்.

English summary
AIADMK's former minister Benjamin has said that the AIADMK will form a mega alliance and win all 40 constituencies in the parliamentary elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X