அ.தி.மு.க முதற்கட்ட உட்கட்சி தேர்தல் விறுவிறு.. இன்று எங்கெங்கு நடைபெறுகிறது.. முழு விவரம்!
சென்னை: அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் உட்கட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க உட்கட்சி முதற்கட்ட தேர்தல் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வில் கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அ.தி.மு.க உட்கட்சி தேர்தல்
உட்கட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இன்று 13-ம் தேதி மற்றும் நாளை 14-ம் தேதி திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

நடைபெறும் பகுதிகள்
மேலும் கன்னியாகுமரி கிழக்கு,கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, சேலம் மாநகர்,சேலம் புறநகர், திருநெல்வேலி, விருதுநகர் கிழக்கு,விருதுநகர் மேற்கு,மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர் ,அரியலூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் மேற்கு,ஈரோடு புறநகர் கிழக்கு, நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு,கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய பகுதிகளிலும் இன்றும் நாளையும் தேர்தல் நடைபெறுகிறது.

சென்னைக்கு எப்போது?
வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு) உள்ளிட்ட பகுதிகளுக்கு ருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி, கோவை
தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மேற்கு, திருப்பூர் புறநகர் கிழக்கு, தருமபுரி உள்ளிட்ட முதற்கட்ட தேர்தலில் விடுபட்ட பகுதிகளுக்கும் அன்றைய தினங்கள் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications