எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவு.. வேகமாக வந்து காரில் ஏறிய எடப்பாடி.. ‘கிளைமாக்ஸ்’.. என்ன முடிவு?
சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சற்று முன்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சபாநாயகர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்கலாம் என முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், இதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக திமுக அரசு அமைந்த பிறகு விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்
எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகருக்கு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து சபாநாயகரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதேசமயம், தன்னை மாற்றக்கூடாது என ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். இதனால், சபாநாயகர் யாருக்கு சாதகமான முடிவை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி முக்கிய ஆலோசனை
ஒருவேளை சபாநாயகர் அப்பாவு முடிவெடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் இருக்கும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நாற்காலியில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வார். இது இருவருக்குமே சங்கடமான சூழல் ஏற்படும். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்காத பட்சத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கலாமா என்பது குறித்தும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏக்கள்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் தனி குழுவாக செயல்பட்டு வரும் நிலையில் மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்தபிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே காரில் ஏறி கிளம்பினார்.

என்ன ஆலோசனை?
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு + 51வது ஆண்டு தொடக்கத்தை சிறப்பாக கொண்டாடுவது, அதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சபாநாயகர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்கலாம் என முடிவெடுக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications