சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“கேம் ஸ்டார்ட்”.. விரைவில் ஒரு ராஜினாமா! முடங்கப்போகும் இரட்டை இலை - அதிமுக முன்னாள் நிர்வாகி

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் விரைவில் இரட்டை இலை அதிமுகவின் முன்னாள் ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற போட்டியால் கடந்த 6 மாதங்களாக உட்கட்சிப்பூசல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஜூன் 11 ஆம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

பஞ்சாப்பிலும் வந்தாச்சு.. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை எப்போது?.. பாமக ராமதாஸ் கேள்வி பஞ்சாப்பிலும் வந்தாச்சு.. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை எப்போது?.. பாமக ராமதாஸ் கேள்வி

பறிபோன பதவி

பறிபோன பதவி

இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

பொதுச்செயலாளராக மீண்டும்

பொதுச்செயலாளராக மீண்டும்

நீதிமன்ற உத்தரவால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஆனார். இதனை தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக பதவியை தனதாக்கிக்கொள்ளலாம் என வேகமாக எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தினார்.

உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்

உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அடுத்த கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

வேகமெடுக்கும் ஓபிஎஸ்

வேகமெடுக்கும் ஓபிஎஸ்

உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு நம்பிக்கை எற்பட்டு உள்ளது. இதனால் அடுத்தடுத்த வேலைகளில் அவர்கள் இறங்கி இருக்கின்றனர். டெல்லியின் ஆதரவு தனக்கே இருப்பதாக கூறி ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

மோடி வருகை

மோடி வருகை

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அருகருகே நின்று வழியனுப்பி வைத்தனர். அந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

அஸ்பயர் சுவாமிநாதன்

அஸ்பயர் சுவாமிநாதன்

மறுநாள் சென்னையில் அமித்ஷா பங்கேற்ற நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரு தரப்பு மோதல் தொடர்பாக தொடர்ந்து குறிப்பு பதிவுகளை வெளியிட்டு வரும் அதிமுகவின் முன்னாள் ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

கேம் ஸ்டார்ட்

கேம் ஸ்டார்ட்

அதில், "விரைவில் ஒரு ராஜினாமா.. அதன் தொடர்ச்சியாக ஒரு இடைத்தேர்தல்... அதன் தொடர்ச்சியாக இரட்டை இலைக்கு மோதல்... அதன் தொடர்ச்சியாக இரட்டை இலை முடக்கம்... The Game starts..." என்று அவர் பதிவிட்டு உள்ளார். இதற்கு முன் மதுரை விமான நிலையத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸிடம் பிரதமர் மோடி, "அனைவரும் ஒன்றிணையுங்கள். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்." என்று அறிவுறுத்தியதாக சுவாமிநாதன் பதிவிட்டு இருந்தார்.

English summary
Single leadership problem between Edappadi Palaniswami and O. Panneerselvam continues, Aspire Swaminathan, the former IT team secretary of AIADMK, has said that soon the double leaf symbol will be blocked.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X