சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தோனி சொன்னது நடந்துருமோ" 2011 உலகக்கோப்பைக்கு பின் இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து!

Google Oneindia Tamil News

சென்னை: 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடருக்கு பின், தற்போது டி20 உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தியுள்ளது. இதனால் அடுத்து வரும் போட்டியில் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளன.

டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் கொடுத்த உற்சாகம் இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. இதுஒரு பக்கம் இருந்தாலும் மழையால் ஏற்படும் சர்ப்ரைஸ்கள் ரசிகர்களுக்கு பல அதிர்ச்சியை வழங்கி வருகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய இடம்பெற்றுள்ள குரூப் 1 பிரிவு, குரூப் ஆப் டெத் என்றே அழைக்கப்படுகிறது. ஏனென்றால் 6 அணிகளில் எந்த அணிக்கும் உறுதியான அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்க முடியாது.

 அப்போ சன்னி லியோன்.. இப்போ தல தோனி.. பீகாரில் தொடரும் அவலம்.. ஹால் டிக்கெட்டில் குளறுபடி அப்போ சன்னி லியோன்.. இப்போ தல தோனி.. பீகாரில் தொடரும் அவலம்.. ஹால் டிக்கெட்டில் குளறுபடி

நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து வெற்றி

அதிலும் முதல் ஆட்டமே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மண்ணை கவ்வியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் கடந்த 11 ஆண்டுகளில் நியூசிலாந்து அணி ஆஸி. மண்ணில் டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதே கிடையாது. அதனை உலகக்கோப்பைத் தொடரில் செய்து சாதனை படைத்தது.

அயர்லாந்து வெற்றி

அயர்லாந்து வெற்றி

இது இப்படியென்றால், மழையின் உதவியால் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையிலான போட்டியும் மழையால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஆடப்பட உள்ள போட்டியில் அனைத்தும் வாழ்வா - சாவா போட்டிகளாகவே அனைவருக்கும் அமையும்.

டி20 உலகக்கோப்பை சுவாரஸ்யம்

டி20 உலகக்கோப்பை சுவாரஸ்யம்

முக்கிய அணிகள் 2 போட்டிகளில் தோல்வியடைந்தால், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது எளிதாக காரியமல்ல. இங்கு ஏற்கனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வியை பெற்றுள்ளன. இதனால் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் போட்டியில், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் போட்டியும் அனைத்து நாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், இலங்கை அணியும் எப்போது எப்படி விளையாடும் என்று கணிக்க முடியாத வகையில் விளையாடுவதால், ஏதாவது ஒரு முக்கிய அணியை இலங்கை வீழ்த்தும் என்று பார்க்கப்படுகிறது.

இந்தியா வெற்றி?

இந்தியா வெற்றி?

இதுமட்டுமல்லாமல் கடைசியாக இங்கிலாந்து அணியை 2011ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்து அணி வீழ்த்தி இருந்தது. அதேபோல் தற்போதைய டி20 உலகக்கோப்பையிலும் வீழ்த்தியுள்ளது. இதனிடையே எம்எஸ் தோனியும் மீண்டும் ஓரியோ விளம்பரத்தை வெளியிட்டு, 2011ம் ஆண்டு போல் உலகக்கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் மழை குறுக்கீடு இல்லாமல் இருந்தால், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

English summary
After the 50 over World Cup series in 2011, Ireland team has defeated the England team in the T20 World Cup series. This has added excitement to the fans in the upcoming match.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X