அன்று எச்.ராஜா.. இன்று ரஜினிகாந்த் - யாருங்க ஆளுநர்? நல்லா கொளுத்திப் போடுறாங்க
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது ரஜினிகாந்த் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியில் சிறப்பாக பணியாற்றி டெல்லி தலைமையின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெரும் பாஜக நிர்வாகிகளுக்கு மாநில ஆளுநர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அத்துடன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வருகிறார்.
புடவையில் புஷ் அப் செய்து மீண்டும் கம்பீரமாக களம் இறங்கும் திமிரு ஈஸ்வரி... இப்போ வேற அவதாரமா!!??

எல்.முருகன்
இவரை தொடர்ந்து தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பதவியேற்ற எல்.முருகனும் வேல் யாத்திரை, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் கட்சிக்காக தீவிர பணியாற்றினார். இவரது பணியை பாராட்டி அவரை மத்திய இணையமைச்சராக்கியது மத்திய பாஜக அரசு. அதேபோன்று தமிழ்நாடு பாஜகவின் மூத்த நிர்வாகியான இல.கணேசனும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இல.கணேசன்
அவரது பதவிக்காலம் முடிந்த பிறகு மேகாலயா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் இல.கணேசன். மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜக்தீப் தன்கர் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கு வங்க மாநில ஆளுநர் பதவியையும் கூடுதலாக இல.கணேசன் கவனித்து வருகிறார்.

எச்.ராஜா
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆரிப் முஹம்மது கானுக்கு பதிலாக புதிய ஆளுநரை மத்திய அரசு நியமிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடைய தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டதாக முன்னணி ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

தவறான தகவல்
சர்ச்சைக்குரிய பேச்சுக்களின் மூலமாக பிரபலமடைந்த எச்.ராஜாவை ஆளுநராக நியமிப்பதா என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஆனால், அடுத்த நாளே அந்த தகவலில் உண்மையில்லை என்பது தெளிவானது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று முன்னணி ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கடந்த மாதம் டெல்லி சென்றது, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது, அடுத்தடுத்து அவர் அரசியலுக்கு வருவதாக வெளியாகும் செய்திகள் போன்றவற்றை குறிப்பிட்டு அவர் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு ஆளுநராகிறார் ரஜினி என்று செய்தி வெளியான நிலையில் தற்போது அவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவின் பெயர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.