வேற லெவலில் மாறப்போகும் சென்னை முகம்.. கிளாம்பாக்கம் வெறும் டிரைலர்தான்.. இங்கே பாருங்க லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா காண இருக்கும் வெளி மாவட்ட பேருந்துகளுக்கான பிரம்மாண்ட பேருந்து நிலையம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற இருக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களால் சென்னையின் முகமே உருமாற இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகளுக்கான முனையம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

2,350 பேருந்து வந்து செல்லும் அளவுக்கு அமைக்கப்படும் இந்த பேருந்து நிலையத்தை மையப்படுத்தி சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் சென்னை மற்றும் புறநகரில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

 சாலை, ரயில் சேவை

சாலை, ரயில் சேவை

குறிப்பாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு அதிவிரைவு சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. அத்துடன் சென்னை மெட்ரோ ரயில் சேவை, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது. அத்துடன் கிளாம்பக்கம் பேருந்து நிலையம் அருகே புதிய புறநகர் ரயில் நிலையமும் அமைத்து அங்கிருந்து பயணிகள் வந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

 கிளாம்பாக்கத்தில் மால்

கிளாம்பாக்கத்தில் மால்

அதுமட்டுமின்றி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே மிகப்பெரிய மால் ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. கூடுவாஞ்சேரியில் இருந்து பரனூர் வரையிலான ஜிஎஸ்டி சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை வெளிவட்ட சாலை

சென்னை வெளிவட்ட சாலை

இந்த திட்டத்தின் கீழ், பரனூரில் இருந்து திண்டிவனம் வரை 8 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் தொடங்க உள்ளன. மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், சென்னை எண்ணூர் துறைமுகம், தட்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில், மாலப்புரத்தை இணைக்கும் வகையில் 6 வழி வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகளும் தொடங்க உள்ளன.

5 சாட்டிலைட் நகரங்கள்

5 சாட்டிலைட் நகரங்கள்

அதேபோல் சென்னைக்கு என செங்கல்பட்டு உட்பட 5 சாட்டிலைட் நகரங்களை அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட இந்த திட்டங்களின் சென்னையின் புறநகரின் தெற்கு பகுதிகளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியை ஏற்படுத்த இருக்கின்றன. ஆனால், சென்னை மற்றும் புறநகரின் அனைத்து பகுதிகளில் மேலும் வளர்ச்சியடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய பரிணாமத்தில் சென்னை

புதிய பரிணாமத்தில் சென்னை

குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைக்கப்பட இருக்கும் 2 வது விமான நிலையம், சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் வழி அதிவிரைவு நெடுஞ்சாலை, சித்தூர் - தட்சூர் இடையேயான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் வழிச் சாலை, சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி உருவாக்கப்படும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளால் சென்னையின் வளர்ச்சி வேறொரு பரிணாமத்தை அடைய இருப்பதாக கணிக்கப்படுகிறது.

 2 அடுக்கு பாலம்

2 அடுக்கு பாலம்

அதேபோல் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்லும் இரண்டு அடுக்கு மேம்பாலம், ரேடியல் சாலை, பூந்தமல்லி - பரங்கிமலை நெடுஞ்சாலை சாலை, ஓ.எம்.ஆர். ராஜீவ் காந்தி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் வழிச்சாலை போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளால் அடுக்க பத்து ஆண்டுகளில் சென்னை அமோக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+