அடுத்த ‛‛மன்னிப்பு’’.. ரிஸ்வானை தொடர்ந்து வங்கதேச ரசிகரிடம் கேட்ட இந்திய ரசிகர்கள்.. என்ன காரணம்?
சென்னை: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை தொடர்ந்து வங்கதேச அணியின் தீவிர ரசிகரான சோயிப் அலியிடம் இந்திய ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 14ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 191 ரன்களை இந்தியா 30.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ரிஸ்வான் அவுட்ஆகி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார். அப்போது சில இந்திய ரசிகர்கள் அவரை பார்த்து ‛ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்' என கூச்சலிட்டனர். இது விவாதத்தை கிளப்பியது.
இதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ரிஸ்வானிடம் ‛Sorry' கேட்டு எக்ஸ் வலைதளத்தில் ஹேஷ்டேக் டிரெண்ட்டானது. இந்நிலையில் தான் தற்போது வங்கதேச அணியின் ரசிகரான சோயிப் அலியிடம் இந்திய ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
அதாவது சில நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 257 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 41.3வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார்.விராட் கோலி 103 ரன்களும், கேஎல் ராகுல் 34 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின்போது வங்கதேச ரசிகர் சோயிப் அலி புலி உடை அணிந்து கையில் புலி பொம்மையை வைத்திருந்தார்.

இந்த வேளையில் இந்திய ரசிகர்கள் சிலர் அவர் வைத்திருந்த புலியை தூக்கி வீசி, சேதப்படுத்தினர். மேலும் பொம்மை புலியின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர். இதனை பார்த்து சிலர் சிரித்தனர். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு சோயிப் அலியும் இந்திய ரசிகர்களின் செயல் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி அவர், ‛‛இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதுபோன்ற சம்பவம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம். ஆனால் இந்திய ரசிகர்களின் தற்போதைய செயல் வருத்தமாக உள்ளது'' என தெரிவித்து இருந்தார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்தபோதே அங்கிருந்த சில இந்திய ரசிகர்கள் அவரிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினர்.
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications