அக்னி ஆட்டம் ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பம்... பல ஊர்களில் சதமடித்த வெயில் - லேசான மழை
அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்க ஒரு வாரம் இருக்கும் முன்பாகவே பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சில ஊர்களில் மழையும் லேசாக பெய்கிறது.
சென்னை: அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் மே 4ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதன் தாக்கம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தது. திருத்தணியில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கோடை வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரித்து வெப்ப சலனம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது.
அதிக வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவானது. அதன் காரணமாக தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கரூர், மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.

திருத்தணியில் 104 டிகிரி வெப்பநிலை
திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர். குளிர்பான கடைளில் பழ ஜூஸ் , கரும்பு ஜூஸ், பதநீர் நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு உடல் சூட்டை தணித்தனர்.

பல ஊர்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது. வேலூர் 102 டிகிரி, திருச்சி, மதுரை 100 டிகிரி, ஈரோடு, கரூர், பாளையங்கோட்டை, தஞ்சாவூர் 99 டிகிரி, சென்னையில் 97 டிகிரி வெயில் நிலவியது. அக்னி நட்சத்திர காலம் அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பாக வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டி வதைக்கிறது.

அக்னி ஆட்டம் ஆரம்பம்
அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. பல ஊர்களில் காலை 8 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வெப்பத்துடன் அனல் காற்றும் வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

தவிக்கும் மக்கள்
வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.. வாகன ஓட்டிகள் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே வாகனத்தை ஓட்டிச்சென்றனர். பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர். தலைநகர் சென்னையிலும் மீனம்பாக்கத்தில் 96.98 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 95.18 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஆங்காங்கே மழை
அதிக வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதன் காரணமாக தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி கரூர், மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை நேற்று பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இதே நிலை 28ம் தேதி வரை நீடிக்கும்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications