Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சக்கட்ட போட்டி.. தமிழகம் வரும் பிரதமர் மோடி.. ட்விட்டர் டிரெண்டில் #GoBackModi, #VanakkamModi..

Subscribe to Oneindia Tamil

சென்னை: திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வர உள்ள நிலையில் ட்விட்டரில் #GoBackModi, #Vanakkam Modi எனும் ஹேஷ்டேக்குகள் பெரியளவில் டிரெண்ட் ஆகின. நெட்டிசன்கள் போட்டிப்போட்டு கொண்டு பதிவுகள் செய்த நிலையில் சில முக்கிய பதிவுகள் இந்த செய்தியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi எனும் ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்ட்டிங்கில் இருக்கும். இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கு போட்டியாக தற்போது ஒவ்வொரு முறையும் பாஜகவினர் #Vanakkam_Modi, #Welcome_Modi எனும் ஹேஷ்டேக்குகளில் பதிவுகள் செய்து பிரதமர் மோடியை தமிழகத்துக்கு வரவேற்கின்றனர்.

இதனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தாலே ட்விட்டர் களைகட்டிவிடும். வழக்கம்போல் #GoBackModi, #Vanakkam_Modi எனும் ஹேஷ்டேக்குகளில் நெட்டிசன்கள், அரசியல் வாதிகள் கருத்துகளை பதிவிட துவங்கி விடுகின்றன. அந்த வகையில் இன்றும் ட்விட்டரில் #GoBackModi, #Vanakkam_Modi எனும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் தான் இந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவுக்காக பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து கார் அல்லது ஹெலிகாப்டரில் புறப்பட்டு காந்தி கிராமிய பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் #GoBackModi, #Vanakkam_Modi எனும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின. ஒருசமயத்தில் இந்த ஹேஷ்டேக்குகள் இந்தியா அளவில் டிரெண்ட் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பொதுமக்கள் அந்தந்த ஹேஷ்டேக்குகளில் படங்களுடன் கருத்துகளை பதிவிட்டனர். அதில் சிலவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 பொருட்கள் விலை உயர்வு

பொருட்கள் விலை உயர்வு

அதன்படி இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி ஒருவர் #GoBackModi எனும் ஹேஷ்டேக்கை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் 2014, 2021ம் ஆண்டில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், பருப்பு, நெய், எண்ணெய், பால், முட்டை ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 வெளியே ஜாவ் என பதிவு

வெளியே ஜாவ் என பதிவு


மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்தி மொழியை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் தான் Veliya Jaav என்ற படத்துடன் #GoBackModi என பதிவிடப்பட்டது.

 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

அதேபோல் இன்னொருவரோ மோடி சொன்னதும், செய்ததும் எனும் 7 விஷயங்களை குறிப்பிட்டு #GoBackModi டிரெண்டிங்கில் இணைந்தார். அந்த பதிவில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, ஊழல் ஒழிப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, விவசாயிகள் இரட்டிப்பு லாபம் என தேர்தல் வேளையில் வாக்குறுதிகளாக கூறிய பிரதமர் மோடி அதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.

 வணக்கம் மோடி

வணக்கம் மோடி

இதுஒருபுறம் இருக்க பாஜகவினர், மூத்த தலைவர்கள் #Vanakkam_Modiji, #Vanakkam_Modi எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். இதிலும் பிரதமர் மோடியின் ஆதரவாளர்களான பாஜகவினர் பல்வேறு பதிவுகளை செய்தனர். #Vanakkam_Modi எனும் ஹேஷ்டேக் பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. 1 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் செய்யப்பட்டன.

 பவர்புல் மோடி

பவர்புல் மோடி

இந்த #Vanakkam_Modi எனும் ஹேஷ்டேக்கில் ஒருவர் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட உலக தலைவர்களை வழிநடத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடந்து வந்த படத்தை பதிவிட்டு இருந்தார். அதோடு கேஜிஎப் படத்தின் வசனமான ‛பவர்புல் பிபிள் கம்பிரம் பவர்புளல் பிளேசஸ்' என்ற வசனம் எழுதப்பட்டு இருந்தது.

 நலன்காப்பவரே

நலன்காப்பவரே

இன்னொருவரோ பிரதமர் மோடி பயபக்தியுடன் நெற்றியில் சந்தனம், குங்குமம் அணிந்து கைக்கூப்பிய நிலையில் இருக்கும் படத்தை பதிவிட்டு, தமிழர்களின் நலன் காக்க தமிழகம் வரும் மோடியே வருக வருக என #Vanakkam_Modi ஹேஷ்டேக்கில் பதிவிட்டு இருந்தார்.

 பொருளாதார முன்னேற்றம்

பொருளாதார முன்னேற்றம்

இதபோல் இன்னொரு பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா 2027 ல் உலகின் மிகப்பெரிய 3வது நாடாக வளரும் என ஸ்டேன்லி மார்கான் அறிக்கை கூறிய விஷயத்துடன் பிரதமர் மோடியின் படத்தை பதிவிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த பதிவில் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது 8.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும். இதன்மூலம் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+