சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அதிரடி அண்ணன்" ஒரே கல்லில் 2 மாங்கா.. கைவிடப்பட்ட கட்சிக்கு பலம்.. கைவிட்ட கட்சிக்கு பலவீனம்.. செம!

திமுகவுக்கு எதிராக அழகிரி வியூகம் அமைத்து வருவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்து வருகிறாராம் முக அழகிரி.. ஒருபக்கம் அதிமுக அல்லது பாஜகவை பலப்படுத்துவது, மற்றொரு பக்கம் திமுகவை பலவீனப்படுத்துவது என்ற திட்டத்தில் இறங்கி உள்ளாராம்.

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற முயன்று வருகிறது பாஜக.. எதுவுமே வேலைக்காகவில்லை.. ரஜினியை நம்பி தவித்து போய்விட்ட நிலையில், அடுத்த பிளானில் இறங்கியது.

அதன்படி வெடித்து வந்ததுதான் கே.பி. ராமலிங்கம் விவகாரம் என்ற தகவல் கசிந்தது.. இவ்வளவு காலம் அமைதியாக இருந்த ராமலிங்கமா இப்படியெல்லாம் அறிக்கை விடுவது என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

கொரோனாக்களிடம் இருந்து திமுகவை காப்போம்... சீண்டிப் பார்க்கும் அழகிரி ஆதரவாளர்களின் தடாலடி போஸ்டர் கொரோனாக்களிடம் இருந்து திமுகவை காப்போம்... சீண்டிப் பார்க்கும் அழகிரி ஆதரவாளர்களின் தடாலடி போஸ்டர்

கேபி ராமலிங்கம்

கேபி ராமலிங்கம்

அதேசமயம், எடுத்த எடுப்பிலேயே திமுகவுக்கு எதிராக காட்டமான அறிக்கைகளை விட முடியாது.. தீவிரமான யோசனைக்கு பிறகு அல்லது பலமான பின்னணி இருக்கவும்தான் இப்படியெல்லாம் செயல்படுகிறார் என்றே சலசலக்கப்பட்டது. கேபி ராமலிங்கம் விவகாரம் வெடித்து கொண்டிருந்தபோதே முக அழகிரி பெயரும் அடிபட்டது.. இவர் பெயர் எப்படி சம்பந்தமே இல்லாமல் இந்த நேரத்தில் அடிபடுகிறது என்று முதலில் குழப்பமானாலும் பிறகுதான் ஒரே நோக்கம், ஒரே பின்னணி என்ற செய்தி பரபரத்தது.

அழகிரி

அழகிரி

இப்போது 2 விஷயம் இன்னும் பலமாக எழுந்து வருகிறது.. ஒன்று கேபி ராமலிங்கம் அதிமுகவில் இணைகிறாரா அல்லது பாஜகவில் இணைகிறாரா? மற்றொன்று முக அழகிரி பாஜகவில் இணைகிறாரா? என்பதுதான் அது. கருணாநிதி இறந்த சமயத்தில் இருந்தே அழகிரியை பாஜக தரப்பில் கூப்பிட்டு கொண்டே இருக்கிறார்கள்.. எத்தனையோ பேர் பாஜகவில் அழகிரிக்கு நெருக்கமாக இருந்தாலும், பாஜகவில் சேர இதுவரை அழகிரி சம்மதிக்கவில்லை என்பதே உண்மை.

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

ஸ்டாலினுக்கு எதிராக பிளான்களை வைத்திருப்பாரே தவிர, பாஜகவில் அவர் சேரவே மாட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஒருவர் அழகிரியிடம் பேச்சுவார்த்தைகூட நடத்திமுடித்துவிட்டதாக சொல்லப்பட்டது.. எனினும் அழகிரிக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்பதுதான் இப்போதைய உறுதியான நிலைப்பாடு.

அஸ்திரம்

அஸ்திரம்

ஆனால் திமுகவுக்கு எதிரான அஸ்திரங்களை எடுத்து கொண்டே இருக்கிறார்.. சமீபத்தில் மேட்டூரில் முதல்வரை கேபி ராமலிங்கம் சந்தித்து பேசினார்.. கிட்டத்தட்ட 40 நிமிஷம் பேசியிருக்கிறார்கள்.. "ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் பெருமளவு நிதி, மற்றும் அதற்கான பொருட்களை, தொழிலதிபர்கள், காண்ட்ராக்டர்கள் என பல தரப்பில் கட்டாயப்படுத்தி வாங்கியதுதான் என்று ராமலிங்கம் தரப்பு எடப்பாடியாரிடம் சொல்லி அது சம்பந்தமான லிஸ்ட்டையும் தந்ததாக தெரிகிறது.

சந்திப்பு

சந்திப்பு

ஒருவேளை இந்த லிஸ்ட் தந்தது உண்மையான தகவல் என்றால், அதனை முதல்வர் எவ்வாறு கையாளுவார், திமுகவுக்கு எதிரான அவரது அடுத்த செயல்பாடு என்னவாக இருக்கும் என தெரியவில்லை. ஆனால், முதல்வர் -ராமலிங்கம் இவர்களது சந்திப்பு அழகிரியின் ஆலோசனைப்படிதான் நடந்தது என்று கூறப்படுகிறது. ஆக, ராமலிங்கம் அதிமுக பக்கம் சாய்வாரா என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.. ஆனால், அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக காய் நகர்த்துகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

அண்ணன் அழகிரி

அண்ணன் அழகிரி

அதுமட்டுமில்லை.. அழகிரி பாஜக பக்கம் சாய வாய்ப்பும் இல்லை.. அப்படி தாவ முனைந்தால், திமுகவுக்கு அதைவிட சறுக்கல் வேறு இருக்க முடியாது.. "பெயருக்கு முன்னால் முக என்ற இன்ஷியல் இருக்கும்வரை அண்ணன், பாஜகவில் இணைய மாட்டார்" என்றே ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

English summary
aiadmk: bjp and mk azhagiris new strategy against dmk leader mk stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X