அதிமுக வேட்பாளராக தென்னரசு தொடர்வார்.. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு!
அதிமுக வேட்பாளர் தென்னரசு தான் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தான் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் வேட்பாளராக தென்னரசு பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள்
அதேபோல் இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர். அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அதிமுக தலைமை அலுவலகம் மூலம் வேட்பாளர் ஒப்புதல் படிவம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதிமுக அலுவலகம்
இந்த நிலையில் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஆகியோர் வந்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.

பணிகள் தொடக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசை ஏற்கிறேன் என்ற வகையில் வேட்பாளர் ஒப்புதல் படிவம் தயார் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதிமுக வேட்பாளராக தென்னரசை முன்மொழிந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் அனுப்பும் பணிகள் தொடங்கியது. இந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க தமிழ்மகன் உசேன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்மகன் உசேன் உத்தரவு
தொடர்ந்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டு அனுப்ப அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உத்தரவிட்டுள்ளார். இன்றைக்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் படிவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் கையெழுத்திட்டு அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். தென்னரசை வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம், அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு என்று தமிழ்மகன் உசேன் உறுதி செய்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications