அடுத்த சிஎம் நீங்க தான்.. சோழி உருட்டி சொன்ன ஜோசியர்! பழனி மலையேறும் பழனிசாமி! விஸ்ரூப தரிசனம் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு பிறகு முதல் முறையாக வெளி மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஜோசியர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் பழனி மலைக்கோயில் தங்கத்தேர் இழுக்கவும் அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக முதல் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை தனது கட்சியில் சந்தித்திராத அவமானங்களை எதிர்கொண்டார்.

அன்று நடைபெற்ற பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகவும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் அப்போது ஒற்றை தலைமை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

 எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

இதனையடுத்து திட்டமிட்டது போல அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பொதுக்குழு கூட்டத்திலேயே ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தேர்தலை சந்தித்து அதிமுகவின் பொது செயலாளராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே எடப்பாடி பழனிச்சாமியும் ஆன்மீக நாட்டம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

அந்தப் பொதுக்குழு கூட்டத்திலேயே ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தேர்தலை சந்தித்து அதிமுகவின் பொது செயலாளராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் முன்னர் இபிஎஸ் வீட்டில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே எடப்பாடி பழனிச்சாமியும் ஆன்மீக நாட்டம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு

அதிமுகவின் ஒற்றைத் தலைமையாய் தான் வர வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த அரசியல் நடவடிக்கைகளின் போதே ஹோமம், பூஜை சிறப்பு, வழிபாடு என அதிக அளவில் ஆர்வம் காட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அதிகாலை எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற பூஜை முடிந்ததற்கு பின்னரே பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள காரில் புறப்பட்டு சென்றார்.

ஜோசியர்

ஜோசியர்

தற்போது பூஜை உள்ளிட்ட நற்பலன்கள் காரணமாகவே தனக்கு பதவி கிடைத்துள்ளதாக கருதும் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜோசியர் ஒருவரை சந்தித்துள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு பிறகு சேலத்தை தவிர வேறு மாவட்டங்களுக்கு செல்லாத எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக வெளி மாவட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாளை எடப்பாடி பழனிச்சாமி செல்ல இருக்கிறார்.

பழனி கோவிலில் தரிசனம்

பழனி கோவிலில் தரிசனம்

சேலத்தில் இருந்து நேரடியாக அல்லது மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பழனி செல்ல இருக்கும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பளிக்க மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக அதிமுகவில் முக்கிய பதவிகளை கைப்பற்றியுள்ள திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மாலை பழனி மலைக்கோவிலுக்கு சென்று தங்கத்தேர் இழுத்து வழிபடும் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அன்று இரவு பழனிலேயே தங்குகிறார்.

அடுத்த முதல்வர்

அடுத்த முதல்வர்

பின்னர் அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப பூஜையில் கலந்து கொண்ட பின்னர் சேலம் புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதற்காக கோவிலிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பழனி மலைக்கோவிலில் தரிசனம் செய்ததற்குப் பிறகு போட்டிகளை வென்று முதல்வராக பதவியேற்றார் எனவும், அதனை பின்பற்றி நீங்களும் பழனி கோவிலில் தரிசனம் செய்தால் எதிர்ப்புகளை ஒழித்துவிட்டு மீண்டும் அதிமுகவின் தலைமையாகவும் தமிழக முதல்வராகவும் பதவியேற்க வாய்ப்புள்ளது என ஜோசியர் ஒருவர் கூறியதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்தப் பயணம் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர் அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+