சல்லி சல்லியாக நொறுங்கும் ஓபிஎஸ் கணக்கு! பக்காவாய் ப்ளான் போட்ட எடப்பாடி! இனி தான் இருக்கு கச்சேரி!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் இருந்தாலும் சட்டமன்ற கூட்டத் தொடரை திமுகவுக்கு எதிராக பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டு இருந்தாலும் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் அளிப்பதை அவர் விரும்பவில்லை. அதற்காக முக்கிய திட்டம் ஒன்றை அவர் கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பல்வேறு விவகாரங்கள் அரசியல் சிக்கல்களுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.
அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு அவை கூடும் நிலையில் கூட்டத்தில் சமீபத்தில் காலமான முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும்.

அதிமுக விவகாரம்
கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக விவகாரம் சட்டமன்ற கூட்டத் தொடரிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதோடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதோடு ஆர்பி உதயகுமாரும் எதிர்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தொடர்
இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணை தலைவராக யார் அமர்வார்கள் என்பது தான் தற்போது அதிமுகவில் பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கிறது. குறிப்பாக சபாநாயகர் அப்பாவு இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் யாருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்பது பெரிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இரு தரப்புக்குமே உரிய மரியாதை வழங்கப்படும், கொள்கை ரீதியாக அவர்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் அதனை அவர்கள் தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற மாண்பு படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

என்ன முடிவெடுக்கப்படும்
நேற்று வரை எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து சபாநாயகரை கடிதம் மூலமும் நேரிலும் தொடர்பு கொண்டு வலியுறுத்தி வரும் நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு இன்னும் இரு நாட்களே இருப்பதால் பரபரப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டால் சட்டமன்ற கூட்டத் தொடர் முழுவதையும் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஓபிஎஸ்க்கு நெருக்கடி
அப்படி ஒரு வேளை அவர் வெளியேறினால் அது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இருக்கும் என சீனியர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறி இருக்கின்றனர். இதன் காரணமாக சற்று யோசித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி வேறு ஒரு முடிவை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மின்கட்டண உயர்வு, அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப வேண்டும். அதற்காக கூட்டத்தொடரில் கலந்து கொண்டு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசிவிட்டு, பின்னர் ஓபிஎஸ் விவகாரத்தை கையிலெடுக்கலாம் என திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications