Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலுக்கே மோசமாயிடும்..தமாகாவை தள்ளிவிடும் இபிஎஸ்? எப்படியும் அதுதான் நடக்கும்! ’பிளான் பி’ இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : இவ்வளவு சீக்கிரம் ஈரோடு சட்டசபை இடைத்தேர்தல் தேதியை அறிவிப்பார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்து இருக்க மாட்டார். இந்த விவகாரத்தால் தனக்கு பல சிக்கல்கள் உருவாகும் என்பதை உணர்ந்துள்ள அவர் வேறு வகையில் பிளான் பி-யை தயார் செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிமுகவில் ஒரு விஷயம் முடிவுக்கு வந்தால் அதற்குள்ளாக வேறு விவகாரம் வெடித்து கிளம்புவது வழக்கமாக போய்விட்டது. ஆட்சியை இழந்த கையோடு அடுத்தடுத்து அதிகார மோதலால் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் இருந்த பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக காய்களை நகர்த்தி வந்த நிலையில் இடையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. திமுகவை பொருத்தவரை கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எடப்பாடிக்கு சவால்

எடப்பாடிக்கு சவால்

இது ஒரு புறம் இருக்க எடப்பாடிக்கு இந்த தேர்தல் மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கும் அரசியல் நிபுணர்கள்.

காரணம் அதிமுகவில் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி தனியாக எந்த தேர்தலையும் சந்தித்ததில்லை. சட்டமன்றத் தேர்தலிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது தான் தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இரு தேர்தல்களிலுமே அதிமுக தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக தீர்ப்பு வந்துவிடும் கட்சியின் தலைமையை கைப்பற்றி தேர்தலை சந்திக்கலாம் என எடப்பாடி திட்டமிட்டு இருந்த நிலையில் ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அவர் எதிர்பார்க்கவில்லை.

பிளான் - பி

பிளான் - பி

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மார்ச் மாதத்தில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். இந்த தேர்தலை சந்திக்கும் வகையில் இரு திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வந்துவிட்டால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை போட்டியிட வைக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதில்லை.

தமாகவுக்கு தொகுதி

தமாகவுக்கு தொகுதி

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரான யுவராஜ் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்றார். தற்போதைய சூழலில் தனது பலத்தை நிரூபிக்க அதிமுகவே களமிறங்கும் என தகவல்கள் உலாவியது. இந்நிலையில் மிகக் குறைந்த கால இடைவெளியே இருப்பதாலும் சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்க கட்சியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவது மிகப்பெரிய சவால் என்பதால் திமுக போல கூட்டணி கட்சிக்கு அதாவது தமாகா-வுக்கே தொகுதியை ஒதுக்கிவிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இருக்கிறது.

கூட்டணி தர்மம்

கூட்டணி தர்மம்

இதற்கு இரு காரணங்கள் இருக்கிறது. ஒன்று கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் தாமாகவுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்ததாக கூறி விடலாம். மற்றொன்று இரட்டை இலை சின்னத்தில் யுவராஜ் போட்டியிட வைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. காரணம் தற்போதைய சூழல் படி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டி இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் அதிமுக சின்னம் யாருக்குமே ஒதுக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

தற்போதும் அதே போன்ற ஒரு நிலை ஏற்படும் இரட்டை இலையில் போட்டியிட முடியவில்லை என்றால் இருவரின் மோதலால் தான் அது நிகழ்ந்தது என கட்சியினரும் பொதுமக்களும் அதிருப்தி அடைவார்கள் என்பதால் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிவிட்டு விவகாரங்கள் சரியான பின்பு நாடாளுமன்ற தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் பிரதான கட்சிகள் இரண்டும் போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளே ஈரோடு தேர்தலில் களமிறங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒரு சிக்கல்

ஒரு சிக்கல்

அதே நேரத்தில் மீண்டும் ஈரோடு கிழக்கை கேட்டு வாங்க அதிமுகவிடம் தமாகா தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறது. இது தான் தற்போதைய நிலை. எடப்பாடி அவ்வளவு எளிதாக ஒரு தொகுதியை தூக்கி தமாகாவுக்கு கொடுத்துவிடமாட்டார் எனவும், அப்படியே கொடுத்தாலும், இரட்டை இலை சின்னத்தில் தான் யுவராஜ் போட்டியிட வேண்டும். இல்லையென்றால் தோல்வி உறுதி என்கின்றனர் எடப்பாடி தரப்பினர். மேலும் கூட்டணி கட்சிக்கு ஓட்டுக்கேட்டு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஈரோடு கிழக்கில் முகாமிட மாட்டார்கள் எனவே நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இது தொடர்பாக முடிவெடுப்பார்கள் என்கின்றனர் சேலம் தரப்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+