அதிமுகவை 3ம் இடத்திற்கு தள்ளும் விஜய்! சென்னையில் டெபாசிட் கிடைப்பதே கஷ்டம்? தவெகவின் திடீர் சர்ஜிங்
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் 4 நாட்களில் தேர்தல் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவினரின் உட்கட்சி சர்வே ஒன்று அவர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாம்.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் அதிமுகவின் வாக்கு வங்கியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) பெரும் ஓட்டையைப் போட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் ரகசிய சர்வே முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். இதெல்லாம் உறுதிப்படுத்தபடாத சர்வே என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

அதிமுகவின் கோட்டையில் சரிவு
சென்னை எப்போதும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்டாலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மீதான ஈர்ப்பால் அதிமுகவுக்கு என்று ஒரு பிரத்யேக 'லாயல்' (Loyal) வாக்காளர் பட்டாளம் இங்கு உண்டு. இரட்டை இலை சின்னத்திற்காகவே வாக்களிக்கும் இந்தத் தீவிரத் தொண்டர்கள், கடந்த காலங்களில் அதிமுகவுக்கு கணிசமான இடங்களைப் பெற்றுத் தந்தனர்.
ஆனால், தற்போது அதிமுக தலைமை நடத்திய உள்கட்சி சர்வேயில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையில் உள்ள அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் பெருமளவில் தவெக-வை நோக்கி நகர்வது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
விஜய்யின் 'எம்.ஜி.ஆர்' பிம்பம் பலிக்கிறதா?
விஜய் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே தன்னை ஒரு 'மக்களுக்கான தலைவர்' என முன்னிறுத்தி வருகிறார். குறிப்பாக, எம்.ஜி.ஆரின் பாணியிலான மக்கள் நலத் திட்டங்கள், ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் அவரது பேச்சுகள் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவில் அந்த 'மாஸ்' (Mass) கவர்ச்சி குறைந்துவிட்டதாகக் கருதும் ஒரு தரப்பு வாக்காளர்கள், விஜய்யை அடுத்த எம்.ஜி.ஆராகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஒரு நிர்வாகியாகத் திறம்படச் செயல்பட்டாலும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு இருந்த அந்த 'மேஜிக்' அவரிடம் இல்லை என்பதே தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது.
திமுகவை எதிர்க்கும் வீரியம்
அதிமுகவின் வாக்குகள் விஜய்க்குத் திரும்புவதற்குப் பின்னால் இருக்கும் மற்றொரு முக்கிய காரணம், அவர் திமுகவை எதிர்க்கும் விதம்.
கடுமையான விமர்சனம்: திமுகவின் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் புகார்களை அதிமுகவை விட விஜய் தரப்பு மிகவும் வீரியமாகப் பேசி வருகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு: ஆளுங்கட்சியான திமுகவை மிக வலுவாக எதிர்க்கும் ஒரு தலைவரையே எதிர்க்கட்சி வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதிமுகவின் மென்மையான போக்கு பல தொண்டர்களுக்கு அதிருப்தியைத் தந்துள்ள நிலையில், விஜய்யின் அதிரடிப் பேச்சுக்கள் அவர்களை ஈர்த்துள்ளன.
சர்வே சொல்வது என்ன?
குறிப்பாக, சென்னையின் பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதோடு, இரண்டு முக்கியத் தொகுதிகளில் வைப்புத் தொகையை இழக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருப்பது கட்சி மேலிடத்தை நிலைகுலையச் செய்துள்ளது. இதுவரை திமுகவின் கோட்டையாகச் சென்னை இருந்தாலும், அதிமுகவின் பலமாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்துத் தீவிர விசுவாசிகள், தற்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் மீது போதிய ஈர்ப்பு இல்லாததால் மாற்று சக்தியைத் தேடி நகரத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சூழலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைத் தன்வசப்படுத்தி வருகிறது. திமுகவை எதிர்க்கும் வேகத்திலும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பிரதிபலிப்பதிலும் அதிமுகவை விட விஜய் ஒரு படி மேலே இருப்பதாகப் பொதுமக்கள் கருதுவதே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. சென்னையின் நகர்ப்புறப் பகுதிகளில் அதிமுகவின் இந்த வீழ்ச்சி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் ஒட்டுமொத்தப் பலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிமுகவின் அடுத்த கட்டம் என்ன?
சென்னையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, வரும் தேர்தல்களில் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் மற்ற மாவட்டங்களிலும் இந்த 'விஜய் தாக்கம்' இருக்குமா என்கிற பயம் இப்போது கட்சிக்குள் பரவியுள்ளது.
தற்போதுள்ள சூழலில், இழந்த வாக்குகளை மீட்டெடுக்க எடப்பாடி பழனிசாமி புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில், 'இரட்டை இலை'யின் பலம் குறைந்து, அந்த இடத்தை 'தமிழக வெற்றிக் கழகம்' பிடித்துவிடும் அபாயம் அந்த கட்சிக்கு உள்ளது.












Click it and Unblock the Notifications