"நான் ஓபிஎஸ் பக்கமா? சான்ஸே இல்ல" எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்திய செங்கோட்டையன்!
சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதனையொட்டி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.
இதனைத்தொடர்ந்து தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இபிஎஸ் உற்சாகம்
இதையடுத்து உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள வீட்டில் தொண்டர்களை சந்தித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான பின்னர், மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

செங்கோட்டை வாழ்த்து
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன், ஓபிஎஸ் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியது. தற்போது அந்தத் தகவல்களை மறுக்கும் வகையில் சென்னை பசுமை வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தர்மம் வென்றது
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் தர்மம் வென்றுள்ளது. இதனால் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தெரிவித்தார்.

குழப்பத்திற்கு இடமில்லை
தொடர்ந்து, அதிமுகவில் இனி எந்த குழப்பத்திற்கு இடமில்லை. அதிமுகவில் என்றும் இருப்பேன். ஓபிஎஸ் தரப்பிற்கு செல்வேன் என்ற பேச்சிற்கு இடமே இல்லை என தெரிவித்தார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications