சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#திமுகவுக்கு முற்றுப்புள்ளிவைப்போம் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக

வெற்றிநடை போடும் தமிழகம் பிரச்சாரத்தின் வெற்றிக்குப் பிறகு, #திமுகவுக்கு முற்றுப்புள்ளிவைப்போம் என்கிற பிரச்சாரத்தை துவங்கியது அதிமுக.

சென்னை: திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்கிற பிரச்சாரத்தை இன்று முதல் அதிமுக துவங்கியுள்ளது. சமூக ஊடகங்களிலும், தேர்தல் களத்திலும் தி.மு.க ஆட்சி காலத்தில் அரங்கேற்றப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் அக்கட்சியின் அடாவடிகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் அ.தி.மு.க புதிய பிரச்சார யுக்தியை இன்று முதல் தொடங்கியுள்ளது.

அ.தி.மு.க.வின் திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற பிரச்சாரத்தை சமூக ஊடகங்களில் முன்னெடுத்துள்ளது. முதல் முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் எளிதில் சென்றடையும் வகையில் இந்த பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் ட்விட்டர் தளத்தில் துவங்கப்பட்டது, ஆரம்பித்த ஓரிரு மணிகளில் வைரலாக பரவியது.

AIADMK has launched a campaign to end the DMK

திமுக ஆட்சியில் நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், மின்சார பிரச்சனைகள், நில அபகரிப்பு மற்றும் ரௌடிகளால் பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள் அதிகார துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள், ஊழல்கள் போன்று திமுகவின் ஆட்சியில் நடைபெற்ற பலதரப்பட்ட சித்திரவதைகளை புள்ளி விவரத்தோடு மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த பிரச்சாரம் அமையும்.

வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பிரச்சாரத்தை அதிமுக அரசு மேற்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தமிழகம் பெற்ற சாதனைகள் அனைத்தும் மக்களுக்கு பார்வைக்கு மீண்டும் பறைசாற்றியது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கல்வி, வேளாண் துறையில் அரசு செய்த அனைத்து சாதனைகளையும் மக்களிடத்தில் பட்டியலிட்டுக் காட்டினார். ஆனால், திமுக காலத்தில் நடைபெற்ற அக்கிரமங்களையும், அத்துமீறல்களையும் மக்களுக்கு தெரிவிப்பது அதிமுக அரசின் தலையாய கடமையாகும்.

எனவே, திமுக காலத்தில் நடைபெற்ற மக்கள் விரோத செயல்களை எடுத்துக்காட்டும் வகையில், "திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்ற தலைப்பில் இந்த பிரச்சாரம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல இருக்கிறது.

ஒரு பிரச்சினையை எடுத்து, அந்த பிரச்சினையும் அதன் பின்னணியையும் புள்ளி விபரங்களோடும், ஆதாரத்தோடும் மக்கள் மத்தியில் இந்த பிரச்சாரம் மூலம்கொண்டு செல்லப்படும். தேர்தல் வரை இது தொடர்ந்து நடைபெற்று, சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க போகும் மக்களுக்கு திமுகவின் மக்கள் விரோத சுயநல ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் இந்த பிரச்சாரம் துவக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X