அதிமுக அலுவலகம் சூறையாட காரணம் போலீஸ்தான்..ஓபிஎஸ் மீது நடவடிக்கை இல்லை..சி.வி. சண்முகம் பரபர புகார்
சென்னை: அதிமுக அலுவலகம் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக எனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் ஓபிஎஸ், மீதும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது.
கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை போலீசார் வெளியேற்றி, அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். பின்னர், தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.வி. சண்முகம்
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த ஜூலை மாதம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார்.

ஆவணங்கள் கொள்ளை
கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புகார் மீது நடவடிக்கை இல்லை
அந்த புகார்கள் மீது எந்த காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக அலுவலகம் உடைக்கப்பட்டது குறித்தும் தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்தும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அலுவலகம் சூறை
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியிடம் சாவியை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 21ஆம் தேதியன்று சாவி ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினம் நேரில் சென்று பார்த்த போது அதிமுக அலுவலகத்தை முழுமையாக அடித்து உடைத்து சூறையாடியிருந்தார்கள். அனைத்து அறைகளும் நாசப்படுத்தப்பட்டிருந்தது.

ஜெயலலிதா அறையில் கொள்ளை
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அமர்ந்து பணியாற்றிய அறை முற்றிலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அவரது அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை.

காவல்துறை துணை
நான் அளித்த புகாரை பதிவு செய்யவில்லை என காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு முறையாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் திமுக அரசுதான், குண்டர்களுக்கு துணையாக இருந்தது காவல்துறைதான் எனவே தமிழக காவல்துறையினரிடம் நம்பிக்கை இல்லை என்றும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குண்டர்கள் மீது நடவடிக்கை இல்லை
இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். இன்றைக்கு செப்டம்பர் 3ஆம் தேதியாகி விட்டது இதுவரைக்கும் நாங்கள் அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அலுவலகம் சூறையாடப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஓ.பன்னீர் செல்வம் மீதும் அவருடன் வந்த குண்டர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications