அதிமுக நீட்டை எதிர்க்கவில்லை.. எதிர்த்தால் சமாதானம் செய்வோம்.. பியூஷ் கோயல் பகீர் பேட்டி!
அதிமுகவினர் நீட்டை எதிர்க்கவில்லை, அப்படியே எதிர்த்தால் அவர்களிடம் பேசி சமாதானம் செய்வோம் என்று பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: அதிமுகவினர் நீட்டை எதிர்க்கவில்லை, அப்படியே எதிர்த்தால் அவர்களிடம் பேசி சமாதானம் செய்வோம் என்று பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு குறித்து எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.
அதிமுகவின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற கோரிக்கையை பாஜக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வந்த பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார்.

என்ன பேட்டி
பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தனது பேட்டியில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. மாநில அரசும் இதில் முடிவு எடுக்க முடியாது. இதில் முடிவு தமிழக ஆளுநரின் கையில்தான் உள்ளது. அவர்தான் சரியான முடிவை இதில் எடுக்க வேண்டும்.

ரஜினி நதிகள் இணைப்பு
பாஜகவின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி வரவேற்பு அளித்துள்ளார். இது பாஜகவினருக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. ரஜினிக்கு பாஜக சார்பாக நன்றி. நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும்.

நீட் இருக்கும்
நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறி வருகிறது. ஆனால் நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. அதிமுக நீட் தேர்வை எதிர்க்கவில்லை.

அதிமுக அப்படி
நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். அதிமுக நீட் தேர்வை எதிர்த்தால் அவர்களை நாங்கள் சமாதானம் செய்வோம். அதிமுக எதிர்க்கும் பட்சத்தில் அவர்களிடம் நாங்கள் பேசுவோம், என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications