• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி அண்ணன் பேர்ல எழுதுங்க! திணறிப் போன மதுரவாயல்! இதுதான் ‘அந்த’ திட்டமா? செம்ம ப்ளான் போங்க!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இருந்தே மதுரவாயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஹோட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 100% எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர் அதிமுகவினர்.

Recommended Video

  OPS Returns! Delhi-யிலிருந்து Chennai-க்கு வந்தார் | *Politics | OneIndia Tamil

  ஜூன் 13 ஆம் தேதியை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்துவிட முடியாது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு சொந்த கட்சியினராலேயே அவனமானப்படுத்தப்பட்டார் ஒற்றைத் தலைமையை எதிர்த்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம்.

  தெற்கை நோக்கி ஓபிஎஸ்.. 7 இடங்களில் 'இறங்கி’ பவரை காட்ட.. ஆரம்பம்தான்.. பெரியகுளம் குலுங்கப்போகுதாம்! தெற்கை நோக்கி ஓபிஎஸ்.. 7 இடங்களில் 'இறங்கி’ பவரை காட்ட.. ஆரம்பம்தான்.. பெரியகுளம் குலுங்கப்போகுதாம்!

  பின்னர் பொதுக்குழுவில் அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், மேடையில் இருந்த இடைமறித்து பேசிய சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க கோரிக்கை வைத்தார்.

  அதிமுக பொதுக்குழு

  அதிமுக பொதுக்குழு

  அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம், ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேடையில் கே.பி.முனுசாமி ஆவேசமானார். இதனால் பாதியிலேயே வெளியேறினார் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளரான வைத்திலிங்கமும். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதோடு, துரோகி ஓபிஎஸ் ஒழிக என முழக்கங்களும் எழுப்பப்பட்டது.

  ஜூலை 11 மீண்டும் கூட்டம்

  ஜூலை 11 மீண்டும் கூட்டம்

  இந்நிலையில் பின்னர் பேசிய சி.வி.சண்முகம், இரட்டை தலைமையால் அதிமுக தீவிரமாக செயல்பட முடியவில்லை. வலிமையான, வீரியமான ஒற்றைத் தலைமை வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை நடப்பு பொதுக்குழுவிலே தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

  ஏற்பாடுகள் தீவிரம்

  ஏற்பாடுகள் தீவிரம்

  அடுத்த பொதுக்குழுவுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடையில் இன்னும் 15 நாட்கள் மீதமிருக்கிறது. ஏற்கனவே பொதுக்குழு நடந்த அதே மண்டபத்தில் தான் தற்போதும் பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில் தற்போது அதற்கான தீவிர ஆலோசனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈடுபட்டு வருகிறது. கடந்த முறை போல இல்லாமல் அதிமுகவில் அனைத்து நிர்வாகிகளும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என கருதுகிறார் எடப்பாடி. இதற்கான காரணத்தை அவர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் அதிமுகவின் தலைமைப் பதவி ஏற்க போவது உறுதியாகி விட்டது.

  அறைகள் முன்பதிவு

  அறைகள் முன்பதிவு

  இதனை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் கட் அவுட்டுகள் தோரணங்கள் பேனர்கள் என துவம்சம் செய்ய காத்திருக்கின்றனர். மேலும் தற்போது இருந்தே மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கும் விடுதிகள் ஓட்டல்கள் அதிமுகவினரின் பெயர்களை முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை எந்த பிளக்ஸ் பேனர்களில், போஸ்டர்களில் ஓபிஎஸ் படம் இடம் பெற்று விடக்கூடாது என தலைமை ரகசிய உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

  ரகசிய உத்தரவு

  ரகசிய உத்தரவு

  மேலும் ஓபிஎஸ் எத்தனை தொண்டர்களை அழைத்து வந்தாலும் அதனை ஈடு செய்யும் அளவுக்கு தங்கள் மாவட்டங்களிலிருந்து தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. மேலும் பொதுக்குழுவுக்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஒன்றிய அளவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  English summary
  With the AIADMK announcing its next general body meeting on July 11, hotel rooms in Maduravayal and its environs have already been booked and the AIADMK is actively making grand arrangements to focus on 100% Edappadi Palanisamy.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X