"ஒற்றை தலைமை”.. எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு? தனியே மீட்டிங் போட்ட ஓபிஎஸ்! பரபர அதிமுக!
சென்னை : கட்சியில் ஒற்றை தலைமையை ஏற்படுத்த அதிமுகவில் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் ஆதரவு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் தனியே ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

அதிமுக ஆலோசனை
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் 150 பேர் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தில் யார்-யாரை பேச அழைப்பது, என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தனர். இந்த முறை கூடும் பொதுக்குழுவில் ஆட்சியை இழந்ததற்கான காரணம் குறித்து பலர் கண்டிப்பாக பேசுவார்கள்.

சசிகலா விவகாரம்
அது மட்டுமல்ல சசிகலா விவகாரம் குறித்தும் கருத்து மோதல்கள் ஏற்படும். ஒற்றை தலைமை கோஷத்தை யாராவது எழுப்பினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி 'மினிட்' புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் வழிகாட்டுதல் குழு உள்ளது. இந்த குழுவுக்கு பதிலாக உயர் மட்டக்குழு உருவாக்கபடக்கூடும் என தெரிகிறது.

போட்டி கோஷம்
சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் நுழைவதை தடுக்க அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற தலைமை கழகத்திற்கு வெளியே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகம் முன்பு ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி கோஷம் எழுப்பினர்.
Recommended Video

ஓபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில் இந்த நிலையில், ஒற்றை தலைமையை ஏற்படுத்த அதிமுகவில்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், எடப்பாடிக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகவும் அதிமுகவில் எதிரொலிக்கிறது. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் தனி ஆலோசனையை தனது வீட்டில் நடத்திக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். மேலும் எடப்பாடி பழனிசாமி தன்னை முன்னிறுத்திக் கொள்வதை விரும்பாத அவர், இதற்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலரை சந்திக்க இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா வருகின்றன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications