அதிமுக ஆட்சியில் அரைகுறை வேலை...10 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை - முதல்வர் ஸ்டாலின் புகார்
அதிமுக ஆட்சியில் செய்த அரைகுறை வேலைகளாலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் நடைபெற்ற ஊழலுமே சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட காரணம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்ததால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரைகுறையாக நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடக மாறியுள்ளன. மழை விட்டு விட்டு பெய்து வருவதால் வெள்ளம் வடியாமல் பல பகுதிகள் குளம் போல தேங்கியுள்ளன.
வெள்ளநீர் எளிதில் வடியும் பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஏராளமானோர் தத்தளித்து வருகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நான்கு நாட்களாக வெள்ளத்திலும் இருளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு
முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த நான்கு நாளாகவே வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். நான்காம் நாளான இன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் கனமழை பாதித்த பகுதிகளில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடப்பதாக கூறினார்.

லஞ்ச ஊழல்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் லஞ்சம், ஊழல் நடந்ததால் தியாகராய நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்ததால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரைகுறையாக நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அனைத்தும் நடக்கிறது
வாக்களித்த மக்களுக்கு எந்த நோக்கத்துக்கு வாக்களித்தார்களோ அதை செய்வோம் என்று கூறிய முதல்வர், நிவாரணப்பணிகளை தொடர்ந்து செய்வோம் என்றார். கொட்டும் மழையில் ஆய்வு செய்வது எனக்கு புதிதல்ல, மழை பெய்தால் எங்கே அடைப்பு வரும் எனத்தெரியும் அதை ஆராய்ந்து செய்து வருகிறோம். அனைத்துப்பணிகளும் நடக்கிறது என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் பதிலடி
சென்னை மேயராக இருந்த மு.க ஸ்டாலின் எந்த பணிகளையும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலடி தரும் வகையில் இன்றைய தினம் பேட்டியளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் லஞ்சம் வாங்கி ஊழலில் திளைத்ததால் தான் இப்பொழுது இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications