சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஇஅதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்.. சிறப்பு மலரை வெளியிடும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் !

Google Oneindia Tamil News

சென்னை: அஇஅதிமுக தொடங்கப்பட்டு இன்று பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Recommended Video

    சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓ.பி.எஸ்?....முன்னாள் செய்தி தொடர்பாளரின் கருத்தால் அதிர்ச்சி

    இந்த பொன்விழா ஆண்டை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    AIADMKs 50th golden jubilee is being celebrated in Tamilnadu

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அதிமுக என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    இன்று முத்ல 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதிமுகவின் பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் கொண்டாட அந்த கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்று காலை விழாவை தொடங்கி வைத்தனர். அதிமுக கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிட்டனர். பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழா தனிமனித இடைவெளியுடன் பங்கேற்குமாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் கேட்டுக் கொண்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    கட்டடம் முழுவதும் பச்சை, வெள்ளை நிற மின்விளக்குகளால் ஒளிருகிறது. அலுவலக வாய்லி முன்பு பிரம்மாண்ட வாழை மரங்கள் கட்டப்பட்டு பொம்மை யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக பொன் விழா ஆண்டை அடுத்து சசிகலா நேற்றைய தினம் ஜெயலலிதா சமாதிக்கு சென்றிருந்தார். இன்று அவர் எம்ஜிஆர் நினைவில்லத்திற்கும் ராமாவரம் தோட்டத்திற்கும் சென்றார். மேலும் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்குகிறார்.

    அந்த 6 பேருக்கு நன்றி.. 'எல்லோரையும் புரிஞ்சுக்கிட்டேன்'.. வேட்பாளரின் வித்தியாசமான நோட்டீஸ்! அந்த 6 பேருக்கு நன்றி.. 'எல்லோரையும் புரிஞ்சுக்கிட்டேன்'.. வேட்பாளரின் வித்தியாசமான நோட்டீஸ்!

    இந்த நிலையில் திநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்ற கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    AIADMK's 50th golden jubilee is being celebrated in Tamilnadu. OPS and EPS will inaugurate the function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X