அனிதா அரசியல்! 2 நீட் தேர்வு முடிஞ்சது.. இப்பயாவது ‘ரகசியத்தை’ சொல்லுங்க உதயநிதி! கேட்கும் விபிபிபி!
சென்னை : நீட் தேர்வு காரணமாக இந்தாண்டும் 3 மாணவர்கள் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுத்துள்ள நிலையில், நீட் விவகாரத்தில் பொய்யான வாக்குறுதியை கொடுத்து மாணவர்களை ஏமாற்றிய திமுக அரசு மாணவர்கள் மத்தியில் தங்களது இயலாமையை ஒத்துக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் தான் வெளியிட்டுள்ள வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவபடிப்புகளில் சேர்வதற்காக இந்தியா முழுவதும், இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், 80 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று அரியலூர் ரயில் நிலையம் அருகே நடராஜன்- உமா தம்பதியினரின் மகள் நிஷாந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்ற இவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில், தோல்வி அடைந்த இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு மாணவி நிஷாந்தி தயாராகி வந்த நிலையில் தான் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் 10 நாட்களில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதிமுக வி.பி.பி.பரமசிவம்
இந்நிலையில் திமுக அரசு மாணவர்கள் மத்தியில் தங்களது இயலாமையை ஒத்துக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் தான் வெளியிட்டுள்ள வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்., இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்," தமிழகத்தில் இன்று நீட் தேர்வு நடைபெற்றுள்ளது .விடியா திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி பொறுப்பேற்ற முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என மாணவ சமுதாயத்தை பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ளது.

விடியா திமுக அரசு
இந்நிலையில் திமுக அரசு மாணவர்கள் மத்தியில் தங்களது இயலாமையை ஒத்துக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் தான் வெளியிட்டுள்ள வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்., இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்," தமிழகத்தில் இன்று நீட் தேர்வு நடைபெற்றுள்ளது .விடியா திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி பொறுப்பேற்ற முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என மாணவ சமுதாயத்தை பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ளது.

விடியா திமுக அரசு
இந்நிலையில், எந்த ஒரு ஆக்கபூர்வமான செயல்களையும் மாணவர்களுக்கு செய்யாத விடியா திமுக அரசால் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர் பறிபோய் இருக்கிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் நீட் தேர்வானது நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். இதற்கு சப்பை கட்டு கட்டுவது போல் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஃபார்முலா என் தந்தையிடம் உள்ளது என மேடைக்கு மேடை பொய்யான வாக்குறுதியை அள்ளிக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் பிதற்றிக் கொண்டிருந்தார்.

நீட் தேர்வு
ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் ஆக்கப்பூர்வமான எந்த ஒரு செயல்களையும் மாணவர்களுக்கு இந்த விடியா திமுக அரசு செய்து கொடுக்கவில்லை. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திமுக அரசு மத்திய அரசுக்கு நீட் தேர்வு குறித்த எந்த ஒரு அழுத்தத்தையும் நாடாளுமன்றத்தில் செய்ததாக தெரியவில்லை. அதேசமயம் காவிரி பிரச்சனையில் மாண்புமிகு எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியின் போது 21 நாள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரியில் வெற்றி கண்டது அதிமுக அரசு.

என்ன செய்தீர்கள்?
நீட் தேர்விற்காக என்ன செய்தீர்கள் என்று திமுகவை கேட்டால் ஏ கே ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். திமுக ஆட்சியில் எந்த ஒரு செயல்பாட்டுக்கும் குழுக்கள் மட்டும் தான் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.கே.ராஜன் குழுக்கள் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை.
Recommended Video

மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்நிலையில் தமிழ்நாட்டு மக்களிடம், மருத்துவக் கனவோடு இருக்கும் மாணவர்களிடம் நீட் தேர்விற்கான எந்த நிலைப்பாட்டையும் இனி எடுக்கப் போவதில்லை என தங்களது இயலாமையை ஒத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக தமிழக முதல்வர் மற்றும் திமுகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications