சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்".. விளாசிய முதல்வர் ஸ்டாலின்.. மீட்டிங்கில் சொன்னது என்ன

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் லாக்டவுன் குறித்து முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். லாக்டவுன் விதிகளை கடுமையாக்குவது தொடர்பாக ஸ்டாலின் இதில் ஆலோசனை செய்தார்.

கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசு சார்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அழைப்பின் பெயரில், சட்டசபையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் இன்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்த முடிவுகளை ஸ்டாலின் இதில் பட்டியலிட்டார். அதோடு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்டார்.

அதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம்? ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பு? அதிமுகவில் புதிய புயலை கிளப்பப் போகிறதா தினகரன் வீட்டு திருமணம்? ஓபிஎஸ் அணிக்கு மட்டும் அழைப்பு?

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

தமிழகத்தில் கடந்த 10ம் தேதியில் இருந்து அமலில் இருக்கும் லாக்டவுன் குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், முழு முடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி அரசின் உத்தரவுகளை மீறுகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் லாக்டவுன் கொண்டு வந்தோம்.

ஆனால்

ஆனால்

அதே சமயம் மக்கள் கஷ்டப்பட கூடாது என்று தளர்வுகளை கொண்டு வந்தோம் ஆனால் சிலர் இந்த தளர்வுகளை மிஸ் யூஸ் செய்கிறார்கள். அதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஊரடங்கில் தற்போதுள்ள தளர்வுகளை கடுமையாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ஆலோசனை

ஆலோசனை

கடந்த 4 நாட்களாக லாக்டவுன் அமலில் இருந்தும் மக்கள் பலர் அதிக அளவில் வெளியே செல்வதாக புகார் எழுந்துள்ளது. பைக்கில் பலர், விதிகளை மதிக்காமல் சுற்றுவதாக புகார் எழுந்தது. இதனால் லாக்டவுனில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும், போலீசுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பலர் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

லாக்டவுன் பலன்

லாக்டவுன் பலன்

இப்படி மக்கள் வெளியே சுற்றினால், லாக்டவுன் மூலம் எந்த பலனும் ஏற்படாது, ஸ்டாலின் கண்டிப்பு காட்ட வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு செவி மடுத்து முதல்வர் ஸ்டாலின் தற்போது இது தொடர்பாக எதிர்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். ஸ்டாலினின் இந்த ஆலோசனை காரணமாக தற்போது தமிழகத்தில் லாக்டவுனில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

English summary
All-Party Meet: Tamilnadu CM MK Stalin eyes for the strict lockdown in the state as people misusing the relaxations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X