சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எல்லோரையும் வர சொல்லிட்டாங்க".. பிரேமலதா போட்ட ஆர்டர்.. அடங்கிய நிர்வாகிகள்.. டிடிவி என்ன பண்ணுவாரோ

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக - அமமுக இடையே கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு தேர்தல் பணிகள் நன்றாக நடந்து வந்தாலும் கூட.. இரண்டு கட்சிக்கும் இடையில் முக்கியமான விஷயம் ஒன்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக தற்போது அமமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. 2011ல் தேமுதிக வென்ற 29 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தேமுதிக மீண்டும் போட்டியிடுகிறது. இரண்டு கட்சிக்கும் இடையில் பெரிய அளவில் மோதல் இல்லை என்றாலும் முக்கியமான விஷயம் ஒன்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.

அமமுக

அமமுக

அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இது விஜயகாந்த் தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட தொகுதியாகும். இங்கு சென்டிமெண்ட்டாக போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்று பிரேமலதா நம்புகிறார். இதற்காக மாநிலம் முழுக்க இருக்கும் தேமுதிக நிர்வாகிகளை களமிறக்கி உள்ளார்.

எப்படி

எப்படி

தேமுதிக மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் இருக்கும் தேமுதிக நிர்வாகிகள் எல்லோரையும் விருத்தாச்சலம் வரும்படி பிரேமலதா உத்தரவிட்டுள்ளாராம். எல்லோரும் உடனே இந்த தொகுதிக்கு வாங்க.. தேர்தல் பணிகளை செய்யுங்கள் என்று பிரேமலதா ஆர்டர் போட்டதாக கட்சி வட்டாரங்கள் தேர்விக்கின்றன.

ஆர்டர்

ஆர்டர்

தன்னுடைய தொகுதியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று முனைப்பில் பிரேமலதா இருக்கிறாராம். இதனால்தான் கிட்டதட்ட 20 மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்களை பிரேமலதா தன்னுடைய தொகுதிக்கு வர சொல்லி இருக்கிறார். பிரேமலதாவின் இந்த முடிவால் அமமுக போட்டியிடும் மற்ற தொகுதிகளில் தேமுதிகவினர் யாருமே இல்லையாம்.

அமமுக

அமமுக

அதாவது அமமுக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை செய்ய ஆட்களே இல்லை என்று கூறப்படுகிறது. தேமுதிகவினர் எல்லாம் இங்கே ஷிப்ட் ஆகிவிட்டதால், அமமுகவிற்கு பணிகளை செய்ய பல தொகுதிகளில் ஆட்களே இல்லையாம்.

 தினகரன்

தினகரன்

இதனால் கூட்டணி கட்சியான தேமுதிகவின் உதவி இன்றி அமமுகவினர் தனியாக தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள் என்று கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்த விஷயங்கள் குறித்து தினகரனுக்கு மெசேஜ் சென்றுள்ளது. ஆனால் இதை தினகரன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

தினகரன்

தினகரன்

அமமுக நிர்வாகிகளோ.. தேமுதிகவுக்கு 60 இடங்களை கொடுத்துள்ளோம் . கூட்டணி கட்சிகளை மதித்து எங்களுக்காக அவர்கள் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் ஒரே தொகுதியில் முகாம் போடுவது சரியில்லை.. இது கூட்டணி தர்மம் இல்லை என்று புலம்புகிறார்கள்.

English summary
Almost all the cadres moved to DMDK Premalatha constituency for election work ahead of Tamilnadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X