Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி எதுக்குத் தான் இருக்காரு.. அதிமுகவை அண்டர் கண்ட்ரோலில் எடுத்த அமித் ஷா! குமுறும் ர.ர.க்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி பேச்சு வார்த்தைகள், ராஜ்ய சபா சீட் விவகாரம் என அனைத்தையும் திமுக தனது கையில் வைத்திருக்கும் நிலையில், எதிர்முகமான அதிமுக கூட்டணியில் அதற்கு நேர் எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குமுறுகின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள். எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகளை ஒதுக்க வேண்டும்? யார் கூட்டணிக்கு வர வேண்டும்? ராஜ்யசபா சீட்டை யாருக்கு தரவேண்டும் என அனைத்திற்குமே அமித்ஷா மூக்கை நுழைப்பதால் எடப்பாடிக்கு பிரஷர் எகிறி வருவதாக சொல்கின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. பல மாதங்களாக தமிழகத்தின் பக்கம் எட்டிப் பார்க்காத டெல்லி தலைகள் அடிக்கடி வரத் தொடங்கியிருக்கின்றன. பாஜக காங்கிரஸ் என தேசிய கட்சிகளின் தலைவர்கள் தற்போது பாதி நாட்கள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள்.

இருந்தபோதும் தமிழகத்தில் கடந்த காலத்தில் இருந்த அரசியல் உறுதித் தன்மை தற்போது இருக்கும் தலைவர்களிடம் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. சொல்லப்போனால் அதிமுகவில் அப்படி ஒன்றே இல்லை என அந்த கட்சியினரே ஒப்புக்கொள்கின்றனர்.

Tamil Nadu Assembly Election 2026 Amit Shah AIADMK

அதிமுக பாஜக கூட்டணி

காரணம் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக முழுக்க முழுக்க கூட்டணி விவகாரங்களை தனியே கையாண்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்கள் வேலைகளை தொடங்கிவிட்டனர். கே என் நேரு உள்ளிட்டோர் கூட்டணி பேச்சு வார்த்தைகளையும், கனிமொழி உள்ளிட்டோர் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் தேசிய கட்சியான காங்கிரஸ் திமுக முதுகின் மீது ஏறிதான் பல ஆண்டுகளாக சவாரி செய்து வருகிறது.

ராஜ்யசபா சீட் அரசியல்

தற்போதைக்கு விஜயை காரணம் காட்டி கூடுதல் தொகுதிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு ராஜ்யசபா சீட்டு என கேட்டு நெருக்கடி கொடுத்தாலும் திமுக காங்கிரசில் லெப்ட் ஆண்டில் தான் டீல் செய்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. கூடுதல் தொகுதிகளை தர முடியாது, ராஜ்யசபா சீட்டு தந்தாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தர முடியாது தமிழகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் டெல்லிக்கு அனுப்புவோம் என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

திமுக

மேலும் கூட்டணி கட்சிகளையும் முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டில் திமுக வைத்திருக்கிறது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சீட்டுகளை குறைத்துக் கொடுத்தாலும் வெற்றி நிச்சயம் என்று உறுதியளித்திருக்கிறது. ஆனால் எதிர்முகமான அதிமுக பாஜக கூட்டணியில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. 'மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்க சட்ட என்னோடது" என்பதைப் போல அதிமுக தலைமையிலான கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வந்தாலும் பாஜக கூட்டணி என்பதுதான் தற்போதைய கள நிலவரம் ஆக இருக்கிறது.

அமித் ஷா தாக்கம்

அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து கூட்டணியை மட்டுமல்ல அதிமுகவையும் அமித்ஷா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைப் போலவே இருக்கிறது. தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக தலைவர்கள் தான் கூட்டணி பேசினர். விழித்துக் கொண்ட தேமுதிக பக்கம் நகர்ந்த நிலையில் பாமக பாஜக பக்கம் சாய்ந்து விட்டது. மேலும் கூட்டணி குறித்து பாஜகவுடன் தான் பேசுவோம் என சில கட்சித் தலைவர்கள் சொல்லி வருவதை எடப்பாடி பழனிச்சாமி ரசிக்கவில்லை.

அதிமுக - பாஜக

இதையெல்லாம் விட எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்குங்கள் என்ற காலம் போய் அதிமுகவுக்கு பாஜக தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என லிஸ்டை வேறு கொடுத்துவிட்டனர். அதில் வேட்பாளர்கள் இவர்கள்தான் என பாஜக முடிவு செய்துவிட்டது. ஆனால் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறேன் எனக் கூறிவரும் அதிமுகவோ இதுவரை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி

பாமகவின் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருந்தாலும் அதற்கடுத்த நிகழ்வுகளில் டெல்லி தலைவர்களையே நம்பி இருக்கிறார் என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த அதிரடியாக ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவும் எடுக்க கூடாது பாஜகவுடன் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என்கிறார்கள். மதுரையில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு அதிமுகவினர் ஆட்களை திரட்டி கொண்டு போவதை பார்க்கும் போது பாஜகவை விட ஓவராக கூவுகிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது.

ஜெயலலிதா

மதுரை கூட்டத்துக்காக அதிமுகவினர் கடந்த பத்து நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி இருக்கிறார்கள் என்ற தகவல் இதனை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை பிரதமர் மோடியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் போயஸ் தோட்டத்தை நாடிச் சென்று தான் பழக்கம். ஆனால் மதுரைக்கு அமித்ஷாவும் மோடியும் வருகிறார்கள் என்றால் அதற்கு முதல் நாளே எடப்பாடி ஆஜராவது என்ன வகையான மனநிலை என தெரியவில்லை என அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களே குமுறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+