சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணைமுதல்வர் மரியாதை - கமல், டிடிவி தினகரன் ட்விட்டர் அஞ்சலி

பொதுவாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளம் என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் அடியொட்டி எந்நாளும் நடந்திட உறுதி ஏற்றிடுவோம் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் அனுசரிக்கப்படும் இந்த நாளில் அதிமுக, திமுக சார்பில் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Anna death anniversary - Kamal and TTV Dinakaran twitter post

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தென்னாட்டு காந்தி, ' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற இலக்கணம் வகுத்து, எளிய மக்களைப் பற்றியே சிந்தித்த தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று என்று பதிவிட்டுள்ளார்.

பொதுவாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளம்" என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் அடியொட்டி எந்நாளும் நடந்திட உறுதி ஏற்றிடுவோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் திமுகவினர் அமைதி பேரணி நடத்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
AMMK leader TTV Dhinakaran and Makkal Neethi Maiyam party leader Kamal Haasan paid tributes to Anna on their Twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X